June 30, 2022

பன்றிக்கு நன்றி சொல்லி -விமர்சனம்!

யது பத்தோ அல்லது எழுபதோ- எல்லா தரப்பினரும் விரும்பிப்படிக்கும் கதைகளின் டாப் 5ல் அம்புலிமாமா கதைகளுமுண்டு. அந்த டைப்பில் ஒரு சின்ன திரைக்கதையை எடுத்து சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார்கள் ‘ பன்றிக்கு நன்றி சொல்லி’ டீம்!

கதை என்னவென்றால் 1000 ஆண்டுகள் பழமையான பஞ்சலோக பன்றி வடிவ சிலை ஒன்று இருக்கிறது. மந்திர சக்தி இருப்பதாக நம்பப்படும் அந்த சிலையை கடத்துவதற்காக வெவ்வேறு இடங்களில் இருந்து வந்த ஒரு போலீஸ்காரர், ஒரு ரவுடி கும்பல் மற்றும் ஆர்வமுள்ள திரைப்படத் தயாரிப்பாளர் ஒன்றாக சேர்ந்து அந்த சிலையை தேடுகிறார்கள். இறுதியில் அந்த சிலை யாரிடம் சென்றது? என்பதுதான் .

விஜய் சத்யா, பாலாஜி ரத்தினம், நிஷாந்த் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்து உள்ளனர். கொஞ்சம் த்ரில்லர் டைப் என்றாலும் அதை சீரியஸாக இல்லாமல், நகைச்சுவையுடன் கலந்து அளித்திருப்பதாலும் ஓவியங்களைக் கொண்டு பன்றியின் கதையைச் சொல்லும் பாணியாலும் படத்தின் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அடுத்து தற்போதைய காலகட்டத்திற்கு வரும் திரைக்கதை விறுவிறுப்பாக செல்கிறது.

ஒளிப்பதிவையும் வித்தியாசமான முறையில் கையாண்டுள்ளதால் பார்ப்பவர்களை எந்த இடத்திலும் சோர்வடையச் செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல், கதை எடுத்துச் சென்ற விதமும், எடிட்டரின் நேர்த்தியான கைப்பக்குவமும் இப்படத்தை பரபரப்பாக்கியுள்ளது. பின்னனி இசை ஓகே ரகம் தான்.

மொத்தத்தில் ரியல் டைம் பாஸ் மூவி

மார்க் 3/5

இப்படம் நேரடியாக ஓடிடி வெளியீடாக சோனி லைவ்-வில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.