பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்!

நடப்பு மாதமான மார்ச் 31ம் தேதிக்குப் பிறகு ஆதார் எண்ணுடன் இணைக்காத பான் அட்டைகள் அனைத்தும் செயலிழந்ததாகி விடும். அதே சமயம், செயலிழந்த பான் எண்களைப் பயன் படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.விதிக்கப்பட்டிருக்கும் காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைக்காவிட்டால் வருமான வரிச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் ஒருவரே, ஏகப்பட் பான் கார்டுகளை வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபடுவதாகவும், வருமான வரி ஏய்ப்பு, வரி ஏய்ப்பு, கடன் ஏய்ப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டப்படி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் அவர்களின் பான் கார்டு செயல்பாட்டில் இருக்காது, அதாவது பயனற்றதாகவிடும் என எச்சரித்து இருந்தது.

இந்த இணைப்பிற்காக இதுவரை 5 முறை அரசு காலக்கெடு அளித்தது. ஆனாலும், மக்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால தாமதம் செய்து வந்தனர். இந்நிலையில், தற்போது டிசம்பர் 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. விதிக்கப்பட்டிருக்கும் காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைக்காவிட்டால் வருமான வரிச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதே சமயம், யாராவது செயலிழப்பு செய்யப்பட்ட பான் அட்டையைப் பயன்படுத்தினால் அவர் களுக்கு சட்டப்படி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை, ஆதாருடன் இணைக்காத பான் அட்டையை வைத்திருப்பவர்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும், பான் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து பணப்பரிமாற்றம் செய்வது, சொத்து வாங்குவது விற்பனை செய்வது, பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது உள்ளிட்டவை பாதிக்கப்படும்.

எனவே, பான் எண்ணுடன் ஆதாரை இணைத்த பிறகுதான் இவற்றை மேற்கொள்ள இயலும். ஏற்கனவே, செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதம் வரை கால நிர்ணயம் விதிக்கப்பட்டு பிறகு தொடர்ந்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு தற்போது மார்ச் 31ம் தேதியே கடைசி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இணையதளம் மூலம் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி?

1. //www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்லவும்.

2. Link Aadhaar என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. திரையில் தோன்றும் பக்கத்தில், பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.

4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும் தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.

5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்.

6. Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.

இதையடுத்து, உங்கள் பான் எண், ஆதார் எண்ணில் இணைந்து விடும்.

aanthai

Recent Posts

கால்பந்து போட்டியால் ஏற்பட்ட வன்முறையில் 129 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷியாவில் கால்பந்து போட்டியில் நடைபெற்ற வன்முறையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பல…

6 hours ago

தூய்மை நகரத்திற்கான பட்டியலில் தொடர்ந்து 6வது ஆண்டாக இந்தூர்!

2022ஆம் ஆண்டுக்கான தூய்மையான நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த…

6 hours ago

பவுடர் பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழாத் துளிகள்!

வெற்றிகரமான பத்திரிகை தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் நாயகனாக நடிக்க, வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை…

8 hours ago

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பு : இந்தியா, சீனா புறக்கணிப்பு!

உக்ரைனில் உள்ள 4 பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பை இந்தியா, சீனா புறக்கணித்துள்ளது.…

22 hours ago

கோடநாடு கொலை & கொள்ளை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம் – டிஜிபி உத்தரவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் கடந்த 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி…

2 days ago

பொன்னியின் செல்வன் – விமர்சனம்!

முன்னொரு காலக்கட்டத்தில் - அதாவது ஊமைப் படங்கள் உருவான காலத்திலும் சரி, பேசும் படமாக அது வளர்ச்சி அடைந்த சூழலிலும்…

2 days ago

This website uses cookies.