October 18, 2021

கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளான முக்தார் பாய்-யின் கேட் வாக்!

பாகிஸ்தானிலுள்ள மீராவாலா என்னும் குக்கிராமத்தில் பிறந்த 44 வயது முக்தார் மாய் 2002ல் அவரது கிராமப் (கட்ட) பஞ்சாயத்தாரால் தண்டனைக்குள்ளாக்கப்படுகிறார். மேல் ஜாதியைச் சேர்ந்த சல்மா என்னும் 27 வயதுப் பெண்ணுடன் முக்தாரின் 12 வயதுத் தம்பி ஷாகூர் பாலியல் உறவு கொண்டான் என்பதுதான் வழக்கு. முக்தாரின் குடும்பம் எவ்வளவோ மன்றாடியும் முக்தார் தண்டனைக்குள்ளாக்கப்படுகிறார். அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை கூட்டுப் பாலியல் வல்லுறவு அவரது தந்தை மற்றும் பிற உறவினர்களின் முன்னிலையிலேயே சல்மாவின் சகோதரன் அப்துல் காலிக் உள்பட நான்கு பேர் முக்தாரை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி கிட்டத்தட்ட நிர்வாணமாக வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.

pak wo nov 5

இப்படிப்பட்ட தண்டனை விதிக்கப்படும் முதல் பெண்ணல்ல முக்தார். அவரது சாதியில் பல பெண்கள் இத்தண்டனையைப் பெற்றிருக்கிறார்கள். இத்தகைய தண்டனைக்குள்ளாகும் பெண்கள் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்வதுதான் வழக்கம். தண்டனை விதிப்பவர்களின் எதிர்பார்ப்பும் அதுதான். ஆனால் தன்னைப் பற்றி வரும் ஒரு பத்திரிகைச் செய்தி, அதன் மூலம் கிடைத்த ஆதரவு தற்கொலை முடிவுக்குக் கிட்டத்தட்ட தயாராகிவிட்ட முக்தாரைத் தன் முடிவை மாற்றிக்கொள்ள வைக்கிறது. இந்த அநீதியை இழைத்தவர்களுக்கு எதிராகப் போராட முடிவுசெய்கிறார். அதிலும் பல சிக்கல்கள். உதாரணத்துக்குச் சில: எழுத, படிக்கத் தெரியாத முக்தார் கொடுக்கும் வாக்குமூலத்தைக் குற்றவாளிகளுக்குச் சாதகமான ஒன்றாக எழுதுகிறார்கள் காவல் துறையினர். குற்றவாளிகளுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டால் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆபத்து உண்டாகும் என மிரட்டுகிறார்கள். முக்தாரின் உறுதியையும் போராட்டக் குணத்தையும் பற்றிப் பத்திரிகைகள் மூலம் கேள்விப்படும் பல தேசங்களைச் சேர்ந்த பெண்ணிய அமைப்பினர் அவரைத் தங்கள் தேசங்களுக்கு அழைத்துப் பேச வைக்கிறார்கள்.

முக்தார் மாய், பெண்களின் உரிமைகளுக்கான போராட்டக் களத்துக்கு வந்தார். மேலும், தன் சொந்த ஊரான மீர்வாலாவில் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, கஷ்டத்தில் இருக்கும் பெண்களுக்கு ஆதரவு தந்து உதவிவருவதோடு, குழந்தைகளுக்குக் படிப்பும் சொல்லித்தருகிறார்.இவருடைய போராட்ட குணம், சேவை மனப்பான்மையை கவனித்த பாகிஸ்தான் பேஷன் டிசைனர் ரோஜினா முனிப், தன் பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முக்தாருக்கு அழைப்புவிடுத்தார்.

இதை ஏற்று முக்தார் மாய், பேஷன் ஷோ மேடையில் கம்பீரமாக நடந்துவந்து நின்று, ”என்னைப் போல பாதிக்கப்பட்ட பெண்கள், மன உறுதியோடு இருக்கவேண்டும். பெண்கள் கோழைகள் அல்ல என்பதை வாழ்ந்துகாட்டும் உதாரண மனுஷியாக நான் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பேஷன் நிகழ்ச்சியியில் கலந்துகொண்டேன்” என்றபோது, அந்த அரங்கம் இன்னும் அழகானது.என்று கூறினார்.