‘போயிங் 777’ ரக விமானத்தை ஓட்டி சாதனை படைத்த பாக். அக்கா-தங்கை!

‘போயிங் 777’ ரக விமானத்தை ஓட்டி சாதனை படைத்த  பாக். அக்கா-தங்கை!

பாகிஸ்தானை சேர்ந்த சகோதிரிகள் மரியம் மசூத், எர்ரம் மசூத். இவர்கள் இருவரும் பாகிஸ்தான் இன்டர்நே‌ஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண் விமானியாக இருக்கிறார்கள். அக்காள் மரியம் மசூத் போயிங் 777 ரக விமானம் ஓட்டி வருகிறார். இந்நிலையில் அவரது தங்கை எர்ரம் மசூத்தும் பாகிஸ்தான் இன்டர் நே‌ஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் போயிங் 777 ரக விமானம் ஓட்டும் அளவுக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.

pak sis
சமீபத்தில் அக்கா-தங்கை இருவரும் ஒரே ‘போயிங் 777’ ரக விமானத்தை ஓட்டி சாதனை படைத்துள்ளனர். அக்காள்-தங்கை இருவரும் லாகூர்-கராச்சி-மான் செஸ்டர், நியூயார்க் மற்றும் லண்டனுக்கு விமானம் ஓட்டியுள்ளனர். இத்தகவலை பாகிஸ்தான் இன்டர்நே‌ஷனல் ஏர்லைன்ஸ் செய்தி தொடர்பாளர் தன்யால் ஹிலானி தெரிவித்தார்.

error: Content is protected !!