October 19, 2021

பாகிஸ்தானில் போலீஸ் டிரெயினிங் மையத்தில் தீவிரவாத தாக்குதல்: பயிற்சிக் காவலர்கள் 41 பேர் படுகொலை

பாகிஸ்தான் போலீஸ் பயிற்சி மையத்தி‌‌ற்குள் நள்ளிரவு திடீரென புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 57 பயிற்சிக் காவலர்கள் கொல்லப்பட்டனர். தென்மேற்கு நகரான க்வெட்டாவில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தி‌‌ன் முதன்மை நுழைவு வாயில் வழியாக நள்ளிரவு நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த போலீஸ்கார‌ர்களை சிறைபிடித்தனர். பின்னர், துப்பாக்கிச்சூடு நடத்தியவாறே பயிற்சி மையத்திற்குள் பயங்கரவாதிகள் புகுந்தனர்.

pak oct 25

பயிற்சி மையத்தில் இருந்த சுமார் 600 பேரை பயங்கரவாதிகள் சிறைபிடித்தனர். அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவ‌திகளுக்கும் இடையே, துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ‌57 பயிற்சி காவலர்கள் உயிரிழந்தனர். 51 பேர் காயமடைந்தனர். இவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின‌றன.

இது தொடர்பாக பலுசிஸ்தான் மாகாண சுகாதாரத் துறை உயரதிகாரி நூர் ஹக் பலோச் கூறும்போது, “திங்கள்கிழமை இரவில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் போலீஸ் பயிற்சி மையத்துக்குள் நுழைந்தனர். இரண்டு பேர் மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டனர். இதில் 41 பேர் கொல்லப்பட்டனர். 106 பேர் காயமடைந்தனர்” என்றார்.

துணை ராணுவப்படை மேஜர் ஜெனரல் ஷேர் அப்கான் கூறும்போது, “தாக்குதலில் ஈடுபட்டவர்களை சிலர் ஆப்கனில் இருந்து தொடர்ந்து இயக்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் லஷ்கர் இ ஜாங்வி என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. இந்த அமைப்பு அல் கொய்தா ஆதரவு இயக்கமாகும்.

பலுசிஸ்தான் உள்துறை அமைச்சர் சர்பராஸ் புக்தி, “தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். இருவர் மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டதால் பலியாகினர். தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டாலும் யாரேனும் பதுங்கியிருக்கிறார்களா என்ற தேடுதலில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.