September 18, 2021

யேசுதாஸூக்கு பத்ம விபூசன் : சோ. ராமசாமிக்கு பத்ம பூஷன் – பத்ம விருதுகள் முழுப் பட்டியல்

நம் பாரத தேசத்தில் குடிமக்களுக்கு தேசிய விருதுகள் (National Award) வழங்கப்படுகிறது. இப்படி தேசிய அளவில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு தேசிய விருது வழங்குவது என 1954 ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. இந்த  தேசிய விருதுகளில் முதன்மையானது பாரத ரத்னா (Bharat Ratna) .இதற்கடுத்து இரண்டாவது உயரிய விருதாக வழங்கப்படுவது பத்ம விபூசண்(Padma Vibhushan)விருதாகும்.

padama award jan 25

பத்ம விபூசன்:

பத்ம விபூசன் என்பது ஒரு தங்கப்பதக்கமும்.இத்துடன் ஒரு பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது.இது முதன்முதலில் 1954 ஆம் ஆண்டு ஜனவரி 2 அன்று இந்திய குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது.எந்த துறையாக இருந்தாலும் அதில் சிறப்பாக விளங்கும் ஒருவருக்கு இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டுவரை 294 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது

பத்ம பூஷண்

இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் பாரத ரத்னா, பத்ம விபூசண் ஆகிய உயரிய விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயர் விருதாகும். எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது

பத்ம ஸ்ரீ விருது

இவ் விருது இந்திய அரசால் குடிமக்களுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டி வழங்கப்படும் நான்காவது மிகப் பெரிய விருதாகும்.கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை போன்ற துறைகளில் புகழ் பெற்ற சாதனைகள் / சேவைகள் புரிந்தோரை அங்கீகரிக்கும் பொருட்டு இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருதினை பெறுபவர்களுக்கு பணபலன் ஏதும் வழங்கப்படுவதில்லை. விதி எண் 18 (1)-ன்படி இவ்விருதினைப் பெற்றோர் தங்கள் பெயருக்கு முன்பும், பின்பும் இவ்விருதின் அடைமொழியை பயன்படுத்தக் கூடாது.2016 வரை 230 தமிழர்கள் உட்பட மொத்தம் 2766 நபர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்தாண்டுக்கான பத்ம விருதுகளை புதன்கிழமை மத்திய அரசு அறிவித்தது. குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படும் இந்த விருதுகளை மார்ச் / ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் வழங்கி கவுரவிப்பார்.திரையிசையில் பல்லாண்டு களாக கோலோச்சி வரும் பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு, நாட்டின் இரண்டாவது உயரிய கவுரமாகக் கருதப்படும் பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஒலிம்பிக் சாதனையாளர் சாக்‌ஷி மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை திபா கர்மாகர், வட்டு எறியும் வீரர் விகாஸ் கவுடா, ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் ஆகியோர் விளையாட்டுப் பிரிவில் பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர்.தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது, 7 பேருக்கு பதம பூஷன் விருது மற்றும் 75 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 19 பேர் பெண்கள். வெளிநாடு வாழ் இந்தியர்கள் உட்பட 7 பேர் வெளிநாட்டினர். 9 பேருக்கு இறப்புக்கு பின் இந்த உயரிய கவுரவம் அளிக்கப்படுகிறது.

பத்ம விருதுகள் முழு பட்டியல்:

பத்ம விபூஷண்:

கே.ஜே.யேசுதாஸ் – இசை – கேரளம்

சத்குரு ஜக்கி வாசுதேவ் – ஆன்மிகம் – தமிழகம்

சரத் பவார் – பொது வாழ்க்கை – மகாராஷ்டிரம்

முரளி மனோகர் ஜோஷி – பொது வாழ்க்கை – உத்தரப் பிரதேசம்

உடுப்பி ராமச்சந்திர ராவ் – அறிவியல் / பொறியியல் – கர்நாடகம்

சுந்தர் லால் பாட்வா (மறைவு)- பொது வாழ்க்கை – மத்தியப் பிரதேசம்

பி.ஏ.சங்மா (மறைவு) – பொது வாழ்க்கை – மேகாலயா

பத்ம பூஷன்:

விஷ்வா மோகன் பட் – கலை / இசை – ராஜஸ்தான்

பேராசிரியர் தேவி பிரசாத் திவிவேதி – இலக்கியம் / கல்வி – உத்தரப் பிரதேசம்

தெஹாம்தன் உத்வாடியா – மருத்துவம் – மகாராஷ்டிரா

ரத்னா சுந்தர் மகராஜ் – ஆன்மிகம் – குஜராத்

நிரஞ்சனா நந்தா சரஸ்வதி – யோகா – பிஹார்

ஹெச்.ஆர்.ஹெச். பிரின்சஸ் மஹா சக்ரி ஸ்ரீநிதோன் (வெளிநாடு) – இலக்கியம் / கல்வி – தாய்லாந்து

‘சோ’ ராமசாமி (மறைவு) – கல்வி / இலக்கியம் / இதழியல் – தமிழகம்

பத்மஸ்ரீ:

வசந்தி பிஷ்த் – கலை / இசை – உத்ராகண்ட்

செம்மஞ்சேரி குஞ்சிராமன் நாயர் – கலை / நடனம் – கேரளம்

அருணா மஹோந்தி – கலை / நடனம் – ஒடிஷா

பாரதி விஷ்ணுவர்தன் – கலை / சினிமா – கர்நாடகம்

சாது மெஹர் – கலை / சினிமா – ஒடிஷா

டி.கே.மூர்த்தி – கலை / இசை – தமிழகம்

லைஷ்ராம் வீரேந்திரகுமார் சிங் – கலை / இசை – மணிப்பூர்

கிருஷ்ண ராம் சவுத்ரி – கலை / இசை – உத்தரப் பிரதேசம்

போவா தேவி – கலை / ஓவியம் – பிஹார்

திலக் கீதாய் – கலை / ஓவியம் – ராஜஸ்தான்

அக்கே யாத்கிரி ராவ் – கலை / சிற்பம் – தெலங்கானா

ஜிதேந்திர ஹரிபால் – கலை / இசை – ஒடிஷா

கைஷால் கேர் – கலை / இசை – மகாராஷ்டிரம்

பரஸல்லா பி பொன்னம்மாள் – கலை / இசை – கேரளம்

சுக்ரி பொம்மகவுடா – கலை / இசை – கர்நாடகம்

முகுந்த் நாயக் – கலை / இசை – ஜார்கண்ட்

புருஷோத்தமன் உபாத்யாயே – கலை / இசை – குஜராத்

அனுராதா பாத்வால் – கலை / இசை – மகாராஷ்டிரா

வாரெப்பா நபா நில் – பொது சேவை – தெலங்கானா

டி.கே.விஸ்வநாதன் – பொது சேவை – ஹரியானா

கன்வால் சிபல் – பொது சேவை – டெல்லி

பிர்கா பதாதூர் லிம்பூ முரிங்லா – இலக்கியம் / கல்வி – சிக்கிம்

ஏலி அகமது – இலக்கியம் / கல்வி – அசாம்

நரேந்திர கோலி – இலக்கியம் / கல்வி – டெல்லி

ஜி.வெங்கடசுப்பையா – இலக்கியம் / கல்வி – கர்நாடகம்

அக்கிதம் அச்சுதன் நம்பூதரி – இலக்கியம் / கல்வி – கேரளம்

காசிநாத் பண்டிதா – இலக்கியம் / கல்வி – ஜம்மு காஷ்மீர்

சாமு கிருஷ்ண சாஸ்திரி – இலக்கியம் / கல்வி – டெல்லி

ஹரிஹர் க்ரிபாலு திரிபாதி – இலக்கியம் / கல்வி – உத்தரப் பிரதேசம்

மைக்கேல் டனினோ – இலக்கியம் / கல்வி – தமிழகம்

பூனம் சூரி – இலக்கியம் / கல்வி – டெல்லி

வி.ஜி. படேல் – இலக்கியம் / கல்வி – குஜராத்

கோடேஸ்வரம்மா – இலக்கியம் / கல்வி – ஆந்திரம்

பல்பீர் தத் – இலக்கியம் / கல்வி / இதழியல் – ஜார்கண்ட்

பாவனா சோமையா – இலக்கியம் / கல்வி / இதழியல் – மகாராஷ்டிரம்

விஷ்ணு பாண்டியா – இலக்கியம் / கல்வி / இதழியல் – குஜராத்

சுப்ரதோ தாஸ் – மருத்துவம் – குஜராத்

பக்தி யாதவ் – மருத்துவம் – மத்தியப் பிரதேசம்

முகமது அப்துல் வஹீத் – மருத்துவம் – தெலங்கானா

மதன் மாதவ் கோத்போலே – மருத்துவம் – உத்தரப் பிரதேசம்

தேவேந்திர தயாபாய் படேல் – மருத்துவம் – குஜராத்

ஹரிகிருஷ்ணன் சிங் – மருத்துவம் – சண்டிகர்

முகுந்த் மின்ஸ் – மருத்துவம் – சண்டிகர்

அருண் குமார் சர்மா – தொல்லியல் – சண்டிகர்

சஞ்சீவ் கபூர் – சமையல் நிபுணர் – மகாராஷ்டிரா

மீனாட்சி அம்மா – களரி – கேரளம்

ஜெனாபாய் தர்காபாய் படேல் – வேளாண்மை – குஜராத்

சந்திரகாந்த் பிதாவா – அறிவியல் / பொறியியல் – தெலங்கானா

அஜோய் குமார் ராய் – அறிவியல் / பொறியியல் – மேற்கு வங்கம்

சிந்தாகினி மெல்லேஷம் – அறிவியல் / பொறியியல் – ஆந்திரம்

ஜிதேந்திர நாத் கோஸ்வாமி – அறிவியல் / பொறியியல் – அஸாம்

தரிபள்ளி ராமையா – சமூக சேவை – தெலங்கானா

கிர்ஷி பரத்வாஜ் – சமூக சேவை – கர்நாடகம்

காரிமுக் ஹக் – சமூக சேவை – மேற்கு வங்கம்

பிபின் கனத்ரா – சமூக சேவை – மேற்கு வங்கம்

நிவேதிதா ரகுநாத் பீடே – சமூக சேவை – தமிழகம்

அப்பாசாஹேப் தர்மாதிகரி – சமூக சேவை – மகாராஷ்டிரம்

பல்பீர் சிங் சீசேவால் – சமூக சேவை – பஞ்சாப்

விராட் கோலி – விளையாட்டு / கிரிக்கெட் – டெல்லி

சேகர் நாயக் – விளையாட்டு / கிரிக்கெட் – கர்நாடகம்

விகாஸா கவுடா – விளையாட்டு / வட்டு எறிதல் – கர்நாடகம்

தீபா மாலிக் – விளையாட்டு / தடகளம் – ஹரியாணா

மாரியப்பன் தங்கவேலு – விளையாட்டு / தடகளம் – தமிழகம்

தீபா கர்மாகர் – விளையாட்டு / ஜிம்னாஸ்டிக் – திரிபுரா

பிஆர் ஸ்ரீஜேஷ் – விளையாட்டு / ஹாக்கி – கேரளம்

சாக்‌ஷி மாலிக் – விளையாட்டு – மல்யுத்தம் – ஹரியாணா

மோகன் ரெட்டி வெங்கட்ராம போதனபு – வர்த்தகம் / தொழில் – தெலங்கானா

இம்ரான் கான் (என்ஆர்ஐ/பிஐஓ) – கலை / இசை – அமெரிக்கா

ஆனந்த் அகர்வால் (என்ஆர்ஐ/பிஐஓ) – இலக்கியம் / கல்வி – அமெரிக்கா

எச்.ஆர்.ஷா (என்ஆர்ஐ/பிஐஓ) – இலக்கியம் / கல்வி / இதழியல் – அமெரிக்கா

சுனிதி சாலமன் (மறைவு) – மருத்துவம் – தமிழகம்

அசோக் குமார் பட்டாச்சார்யா (மறைவு) – தொல்லியல் – மேற்கு வங்கம்

டாக்டர் மாபுஸ்கர் (மறைவு) – சமூக சேவை – மகாராஷ்டிரம்

அனுராதா கொய்ராலா (மறைவு) (வெளிநாட்டினர்) – சமூக சேவை – நேபாளம்