ஆக்சிஜனும் ஸ்டெர்லைட்டும்…..!

ஆக்சிஜனும் ஸ்டெர்லைட்டும்…..!

வைகோவின் இதயம் படு வேகமாக அடித்துக் கொள்கிறது…. ஒருவேளை ஸ்டெர்லைட் ஆலையை நீதிமன்றம் திறந்து விடச் சொல்லி விட்டால், தன் வாழ்நாள் சபதம் என்னாவது?…. ஆக்சிஜன் அதிக அளவில் தமிழ்நாட்டில் உள்ளது எனவே திறக்காதீர்கள் எனக் கதறுகிறார்… இது அவரது நல்ல எண்ணமா? ஆலையைத் தொடங்க ஒப்புதல் அளித்த போது திமுக அரசுக்குத் தெரியவில்லையா, இது மாசுக் குறைபாடு உண்டாக்கும் என்று? இல்லை. அவர்களுக்குத் தெரியும். இந்த ஆலையில் மாசுக் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் திறமையாக இயங்கி மாசு அளவை அனுமதிக்கப் பட்ட அளவிலேயே வெளியிடுகின்றன. நிலம் மாசடையவில்லை. நீர் மாசடையவில்லை. காற்றும் அது போலவே.

ஆனால் வைகோ இத்தனை மூர்க்கமாக எதிர்க்கும் ஒரே காரணம், அன்றைய அவரது அரசியல் எதிரி திமுக கையெழுத்திட்ட ஒரே காரணம்தான்… எல்லா வித கொடுக்கல் வாங்கலிலும் பங்கு கொடுக்கப் பட்டாலும் வசூல் போதவில்லை என்று சொந்தக் காரங்களுக்கு டிரான்ஸ்போர்ட் காண்ட்ராக்ட் வேறு.ஒரு வழியாக இல்லாத மாசுவைக் காட்டி, மக்களின் மனதில் விஷ விதை விதைத்து ஆலையை மூடச் செய்தும் விட்டார் மனிதர்.

இப்போது அந்த ஆலையின் அவசியம் அரசுக்குத் தெரிகிறது. மத்திய அரசு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தடை ஏதும் இல்லை என்றும் உயர் நீதி்மன்றத்திலும் தெரிவித்து விட்டது. இந்த நிலையில் மாநில அரசின் நிலைப்பாடு என்ன என்பதே நீதிமன்றத்தின் கேள்வி.இங்கே காபந்து அரசு எனச் சொல்லிக் கொள்ளும் அதிமுக, அடுத்த மாதம் தன் நிலைமை என்னவாகும் என நினைத்து தன் நிலைப் பாட்டை சொல்ல மறுக்கிறது.

திமுகவிற்கோ, இதை விட அதிக சங்கடம். ஸ்டெர்லைட் போராட்டத்தை பின்னிருந்து தூண்டி விட்டு அதில் குளிர் காய்ந்து, இப்போது அதன் பலனை அறுவடை செய்ய இருப்பதால் வாயைப் பொத்திக் கொண்டு இருக்கிறது. இவர்களுக்கு இடையில் அரசு அதிகாரிகள், அடுத்த ஆட்சி யார் என்று தெரியும் வரை, எவன் செத்தால் என்ன என்று இலவு காக்கிறார்கள்…. ! இடைப் பட்ட நேரத்தில் குளிர் காயும் காங்கிரஸ் குள்ள நரிகள் அழகிரியும், ஜோதிமணியும், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும் ஆக்சிஜனை எதற்கு வெளி மாநிலத்திற்குத் தருகிறீர்கள் என்று லூசுத்தனமாக ட்வீட் செய்து கொண்டு இருக்கிறார்கள்…

அடேய் மூளையை பப்புவிடம் தந்து விட்ட எல்கேஜி புள்ளைங்களே…. ‘புனாவிலிருந்து அடுத்த மாநிலமான உனக்கு, ஏன் நான் கோவிட் மருந்து தரணும்?’ன்னு கேள்வி கேட்டான்னா எங்கே போய் மூஞ்சியை வெச்சுப்பே? இவர்கள் பதறல் வெளிப்படையாகத் தெரிகிறதா? ஸ்டெர்லைட் மீண்டும் நீதிமன்றம் வழியாக வந்து விடப் போகிறது என்கிற பதட்டம்… காரணம் அத்தனை ஈகோ….

மக்கள் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் கொத்து கொத்தாகச் செத்தாலும், சுடுகாடு போகட்டும் என்று நினைக்கிற இத்தகைய நபும்சகர்களை, மக்களே புறக்கணியுங்கள்….

நீதிபதி எஜமானே! ஆக்சிஜன் தந்த விவேக்கை நாங்கள் எவ்வளவு கொண்டாடினோம் பார்த்தீர்கள் இல்லையா? அது போலவே ஸ்டெர்லைட் ஆக்சிஜன் ஆலை உடனடியாகத் தொடங்கி தினசரி 1050 டன் ஆக்சிஜனை இந்தியத் திரு நாட்டிற்கு வழங்க வேண்டும் என உத்தரவிடுங்கள்…. தடுக்க வருபவனை ராணுவம் கொண்டு ஒடுக்குங்கள் எஜமானே!… இந்தப் புல்லுருவி அரசியல்வாதிகளை விட நீதி மன்றங்களையே நாங்கள் நம்புகிறோம்….

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிடு்ங்கள் நீதிமானே!

error: Content is protected !!