November 27, 2022

ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட 800 வகை அத்தியாவசிய மருந்துகள் விலை 10 % வரை உயர்வு!

த்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1-ம் தேதி மாதம் முதல் 10.7 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.

வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1-ம் தேதி முதல் 10.7 சதவிகிதம் உயர்கிறது எனவும் இதுவே அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச விலையாகும் என்றும் இதனால் தேசிய அத்தியாவசிய மருந்து பட்டியலிலுள்ள 800க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை உயரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் நேற்று வெளியிட்ட் அறிவிப்பின்படி, மருந்து நிறுவனங்கல் 2021 ஆண்டு மொத்தவிலை குறியீட்டின் அடிப்படையில் மருந்துகள்விலையை 10.70 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ள அனுமதித்துள்ளது.
இதனால் தேசிய அத்தியாவசியப் பட்டியலி்ல் இருக்கும் 800 வகை மருந்துகள், அத்தியாவசிய மருந்துகள்விலை 10 முதல் 11 சதவீதம் வரை ஏப்ரல் மாதத்திலிருந்து விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார ஆலோசகர் அலுவலகம், மத்திய தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகப்பிரிவு, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஆகியவை மொத்தவிலைக் குறியீட்டின் அடிப்படையில், அளித்த பரிந்துரை அடிப்படையில் 10.70 சதவீதம் வரை மருந்துகள் விலையை உயர்த்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அத்தியாவசியப் பட்டியலில் இருக்கும் மருந்துகள் அனைத்தும் பல்வேறு சுகாதாரத் திட்டங்களுக்கு அரசு மருத்துமனைகளில் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் நிர்ணயித்து வருகிறது. இந்த வகை மருந்துகள் சாதாரண காய்ச்சல், ஒவ்வாமை, இதய நோய்கள், ரத்தஅழுத்தம், தோல்நோய்கள் உள்ளிட்டபல நோய்களுக்கு அரசால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகை மருந்துகள் விலை உயரக்கூடாது, சமானிய மக்களுக்கு சலுகை விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக 886 வகை மருந்துகளுக்கும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் விலைக் கட்டுப்பட்டை நிர்ணயித்துள்ளது

மொத்தத்தில் தேசிய அத்தியாவசிய மருந்து பட்டியலில் பாராசிட்டமால், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், பாக்டீரியா தொற்று தடுப்பு மருந்துகள், ரத்த சோதை எதிர்ப்பு மருந்துகள், வைட்டமீன்கள் மற்றும் தாதுக்கள் போன்ற மருந்துகள் அடங்கும் என தெரிவித்துள்ள இந்திய தேசிய மருந்துகள் ஆணையம், கரோனா தொற்று மிதமாக மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பயன் படுத்தப்படும் சில மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டுகளின் விலையும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.