November 29, 2021

சி விஜில் மூலம் 23 ஆயிரம் புகார்கள் வந்திருக்குது..! ஆனா..? – எலெக்‌ஷன் கமிஷன் நோ ஆக்சன்!

பாராளுமன்றத் தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரத்துடன் புகார் தெரிவிக்க சி-விஜில் என்ற மொபைல் ஆப்-ஐ வடிவமைத்துள்ளது. இதில் பொதுமக்கள் ஆதாரத்துடன் எளிதாக புகார்களை தெரிவிக்கலாம். இந்த சி-விஜில் என்ற மொபைல் ஆப்-இல் புகார் செய்யப்படும் விபரங்கள் மாவட்ட தேர்தல் அலுவல ருக்கு வரப்பெற்றவுடன் சம்பந்தப்பட்ட பறக்கும் படை அல்லது நிலைக்கண்காணிப்புக் குழுவிற்கு அனுப்பப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவித்தவருக்கு, புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிக்கப்படும்.

இந்நிலையில் இந்த  சிவிஜில் மொபைல் செயலி மூலம் கடந்த 18 நாட்களில் 23ஆயிரம் புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கடந்த 10ந்தேதி முதல் சிவிஜில் செயலி மூலம் 23ஆயிரம் புகார்கள் வந்துள்ளதாகவும், இது குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் 60 சதவிகித புகார்கள், உண்மையானது என்பது தெரியவந்துள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

ஆனால், இந்த புகாரின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தெரிவிக்கவில்லை. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.