மிஸ் யூனிவர்ஸ் @ பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்றார் இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து- வீடியோ!
நம் நாட்டின் பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த 21 வயது அழகி ஹர்னாஸ் சாந்து, பிரபஞ்ச அழகி (மிஸ் யூனிவர்ஸ்) வென்றுள்ளார். இஸ்ரேல் தலைநகர் ஏலாத் நகரில் நடைபெற்ற 70-வது மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டியில் இந்த பட்டத்தை வென்றுள்ளார் அவர். 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய நாட்டின் சார்பில் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை இந்த 5.9 அடி உயர அழகி வென்றுள்ளார். இதனை கொண்டாடும் விதமாக அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
70ஆவது மிஸ் யுனிவர்ஸ் போட்டி இஸ்ரேலின் ஈலாட் நகரில் நடைபெற்றது. இந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் தென்னாப்பிரிக்கா, பராகுவே உள்ளிட்ட 80 நாடுகளைச் சேர்ந்த போட்டியர்களை வீழத்தி பஞ்சாபைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார். தென்னாப்பிரிக்கா, பராகுவே உள்ளிட்ட 80 நாடுகளைச் சேர்ந்த போட்டியர்களை வீழ்த்தி பஞ்சாபைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார்.
ஹர்னாஸ் கவுர் சாந்துக்கு முன்னாள் மிஸ் யுனிவர்ஸான மெக்சிகோவின் ஆண்ட்ரியா பட்டம் சூட்டினார்.
முன்னதாக லாரா தத்தா 2000ம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெற்றி வாகை சூடிய நிலையில் 20 ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் ஹர்னாஸ் கவுர் சாந்துக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
🦉Miss India🇮🇳, Harnaaz Sandhu for the win!👑 Please crown her! She deserves it!❤️
இந்தியாவின் ஹர்ணாஸ் சாந்து பிரபஞ்ச அழகி பெற்றார்#MissUniverse2021 #MissIndia#HarnaazSandhu pic.twitter.com/Yn8HsFmtBR
— Àanthai Répørter™ 👀🦉 (@aanthaireporter) December 13, 2021
இதை அடுத்துமிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற ஹர்னாஸ் கவுர் சந்து பேசியதாவது
உங்களுக்காக நீங்களே பேசுங்கள். உங்கள் வாழ்க்கையை வழி நடத்துபவர் நீங்கள் தான். உங்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது நீங்கள் தான். நான் என்னை நம்புகிறேன், அதனால்தான் இங்கே நிற்கிறேன். இயற்கை எப்படி அழிக்கப்படுகிறது என்பதை பார்க்கும் போது என் இதயம் உடைகிறது. அதற்கு காரணம் நமது பொறுப்பற்ற செயல்பாடுகள் தான். பேச்சை குறைத்து செயலில் தீவிரத்தை கூட்ட வேண்டிய நேரம் இது. காரணம் நமது ஒவ்வொரு நடவடிக்கையும் இயற்கையை அழிக்கலாம் அல்லது காக்கலாம் -என ஹர்னாஸ் கவுர் சந்து பேசினார்