October 25, 2021

ஆஸ்கார் விருது பட்டியலில் இடம் பிடித்த நம்ம தமிழர் பங்கேற்ற குறும்படம்!

91 ஆவது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நேற்று நடைபெற்றது. சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருது கிரீன் புக் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருதை ராமி மாலெக்கும், சிறந்த நடிகைக்கான விருதை ஒலிவியா கோல்மனும் பெற்றனர்.

சிறந்த ஆவணப்படமாக ப்ரிடியட் என்ட் ஆப் சென்டன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும், பொதுவாக இந்த சமயங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்தும் இந்தப் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த முருகானந்தத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஈரானிய நாட்டைச் சேர்ந்தவரால் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆஸ்கார் விழாவில் விருதுகள் பெற்றவர்களின் முழு விவரம்:

சிறந்த படம் – ‘கிரீன் புக்’

சிறந்த இயக்குநர் – அல்போன்சோ குவாரோன் ‘ரோமா’

சிறந்த நடிகர் – ரமி மாலக் ‘போகிமியான் ராஃப்சோடி’

சிறந்த நடிகை – ஒலிவியா கோல்மேன் ‘த ஃபேவரைட்’

சிறந்த ஆவணப்படம் – எலிசபெத் சாய் வசர்ஹெலி, ஜிம்மி சின், இவான் ஹேஸ் மற்றும் ஷானன் டில் ‘ப்ரீ சோலோ’

சிறந்த வெளிநாட்டு படம் – ‘ரோமா’ மெக்ஸிகோ

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – ‘ஸ்பைடர் மேன்’ , ‘இன்டூ த ஸ்பைடர் வெர்ஸ்’.

சிறந்த அனிமேஷன் குறும்படம் – ‘பாவ்’

சிறந்த ஆவண குறும்படம் – ‘பீரியட் எண்ட் ஆப் சென்டன்ஸ்’

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் – ‘ஸ்கின்’

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – ‘ஃபர்ஸ்ட் மேன்’

சிறந்த ஒளிப்பதிவாளர் – அல்போன்சோ குவாரோன் ‘ரோமா’

சிறந்த படத்தொகுப்பாளர் – ஜான் ஓட்மேன் ‘போகிமியான் ராஃப்சோடி’

சிறந்த திரைக்கதை – நிக் வல்லலோங்கா, பிரெயன் கியூரி, பீட்டர் ஃபேரலி ‘கிரீன் புக்’

தழுவல் திரைக்கதை – சார்லி வச்டெல், டேவிட் ரேபினோவிட்ஸ், கெவின் வில்மோட் மற்றும் ஸ்பைக் லீ ‘பிளாக்கிளான்ஸ்மேன்’

சிறந்த பின்னணி இசை – லட்விக் கோரன்சான் ‘பிளாக் பேந்தர்’

சிறந்த பாடல் – ஷாலோ ‘எ ஸ்டார் இஸ் பார்ன்’

சிறந்த துணை நடிகர் – மஹர்ஷலா அலி ‘கிரீன் புக்’

சிறந்த துணை நடிகை – ரெஜினா கிங் ‘இஃப் ப்பீல் ஸ்ட்ரீட் குட் டாக்’

சிறந்த ஒப்பனை – கிரேக் கேனம், கேட் பிஸ்கோ மற்றும் பேட்ரிசியா டெஹானி ‘வைஸ்’

ஆடை வடிவமைப்பு – ரூத் கார்டர் ‘பிளாக் பேந்தர்’

தயாரிப்பு வடிவமைப்பு – ஹன்னா பீச்லெர் ‘பிளாக் பேந்தர்’

சிறந்த ஒலி படத்தொகுப்பு – ஜான் வார்ஹஸ்ட்
மற்றும் நினா ஹார்ட்ஸ்டோன் ‘போகிமியான் ராஃப்சோடி’

ஒலி கோர்ப்பு – பால் மேஸ்சி, டிம் கேவஜின், ஜான் கேசலி ‘போகிமியான் ராஃப்சோடி’