April 2, 2023

காதலர் தினத்தில் ரிலீஸாகும் கண்ணடி நாயகி பிரியா வாரியாரின் ஒரு அடார் லவ்!

நாடு முழுவதும் இணையத்தின் மூலம் ஒரே இரவில் பிரபலமானவர் பிரியா வாரியர். மலையாளத் தில் தயாரான ஒரு பள்ளி பருவ காதல் திரைப்படம் ‘ஒரு அடார் லவ்’. இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘மாணிக்ய மலரே பூவி’ என்றொரு பாடலில் புருவத்தை உயர்த்தி ஸ்டைலாக கண் அடித்து ஒட்டு மொத்த இளைஞர்களை சுண்டியிழுத்தார் இவர். இப்பாடலினை ரசிகர்கள் பலரும் தங்கள் பாணியில் வெட்டி ஒட்டியும் இணையத்தில் வெளியிட்டு பிரபலப் படுத்தினர்.

அப்படி பிரபலமான பின்னர் தற்போது இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார். சமீபத்தில் பாலிவுட்டில் பிரபல நடிகருடன் ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் நடித்து முடித்தும் விட்டார் .இந்நிலையில் தமிழிலும் ஒருகால் வைப்பேன் என்று கூறியுள்ளார்.

இப்படி இவர் கண்ணடித்து பிரபலபடுத்திய ’ஒரு அடார் லவ்’படம் மலையாளம், தமிழ், இந்தி உள்பட பல மொழிகளில் வெளியாக உள்ளது தமிழில் டப் செய்யப்பட்ட இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு பிப்ரவரி 14-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தில் தற்போது இப்படத்தின் ஸ்னீக் பீக் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில், பிரியா வாரியர் அடிக்கும் லிப் லாக் காட்சி ட்ரெண்டிகாகி விட்டதாக்கும்.