October 4, 2022

விவசாயிகளை எதிர்கட்சிகள் தவறாக வழி நடத்தறாங்க: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

மத்திய அரசின் விவசாய சீர்திருத்தங்கள் பற்றி விவசாயிகள் தவறாக வழி வழி நடத்தப்படு கிறார்ள் என்று குஜராத் மாநிலத்திற்கான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது உரையின் போது குற்றம் சாட்டினார்.

குஜராத் மாநிலத்தில் கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் ஆலை. சூரிய மின்சாரம். காற்று மின்சாரம் ஆகியவை உற்பத்தி செய்யப்படும் கூட்டு மின்சார ஆலைகள். தானியங்கி பால் பதப்படுத்தும் மற்றும் சிப்பமிடும் ஆலை ஆகியவற்றிற்கு இந்திய பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இவ்விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசியதன் சாராம்சம்:

உலக அளவில் காலம் மாறிவருகிறது இந்த மாற்றங்களுக்கு ஏற்ப உலகில் சிறந்த நடை முறை களை நாமும் பின்பற்ற வேண்டும் இந்த வழியில் கட்ச் பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள் கட்சி பகுதியில் இருந்து இப்பொழுது பழங்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன கட்ச் பகுதி விவசாயிகள் புதுமையை கையாள தயங்க மாட்டார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இதனைக் கூறலாம் விவசாயம் கால்நடை அபிவிருத்தி மீன் வளர்ப்பு ஆகிய துறைகள் குஜராத் மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளில் பெரிதும் வளர்ந்துள்ளன இதற்கு காரணம் அரசு இந்தப் பணிகளில் தங்கள் தலையிட்டு மிகக் குறைந்த அளவுக்கு குறைத்துக் கொண்டது தான் குஜராத் அரசு என்ன செய்தது விவசாயி களுக்கு செயல்பட அதிகாரம் வழங்கப்பட்டது கூட்டுறவு அமைப்புக்கள் மூலம் அவர்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டனர்.

விவசாயிகளின் அமைப்புக்களும் ஏன் எதிர்க்கட்சிகளும் கூட கடந்த காலத்தில் விவசாயி களுக்கு என்ன தேவை என்று வலியுறுத்தினார்கள். அவர்கள் கேட்டுக்கொண்ட வழியில் விவசாய சீர்திருத்தங்கள் துவக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் நலனில் எப்பொழுதும் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது விவசாயிகளுக்கு தொடர்ந்து நாம் உறுதி அளிப்போம் அவ ர்கள் கவலைகளை போக்க அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம்.புதிய தொழில் நுணுக்கம் புதிய பொருளாதாரம் ஆகியவற்றில் கட்சி பகுதி விவசாயிகள் ஒரு விரைவான முன்னேற்றத்தை அடைந்திருக்கிறார்கள். இங்கு உள்ள என்னுமிடத்தில் மரபுசாரா மின்சார உற்பத்தி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கடல் நீரை குடிநீராக சுத்தம் செய்யும் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது 56 என்னும் இடத்தில் புதிய தானியக்க பால் பதப்படுத்தும் ஆலை சிற்பமும் ஆலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது இவை கட்ச் பகுதியில் வளர்ச்சியில் புதிய மைல் கற்களாக விளங்கும். இந்தத் திட்டங்களின் பயன்கள் பழங்குடியினர் விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் இப்பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு கிடைக்கும் இன்று நாட்டின் விரைவான வளர்ச்சி உடைய பகுதிகளில் ஒன்றாக கட்ச் விளங்குகிறது இங்கு மக்கள் மத்தியில் தகவல்தொடர்பு நேரடித் தொடர்பு ஆகியவை நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றன ஒரு காலத்தில் குஜராத் மக்கள் சாப்பிடும் நேரத்தில் மின்சாரம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள் அத்தகைய நிலைமை இப்பொழுது முழுக்க மாறிவிட்டது.

இன்றுள்ள குஜராத் மாநில இளைஞர்களுக்கு பழைய வசதி இல்லாத காலங்களில் என்ன வென்றே தெரியாது குஜராத் வளர்ச்சியே இல்லாத பகுதியாக முன்பு இருந்தது. ஆனால் இப்பொழுது இந்தப் பகுதியிலிருந்து இளைஞர்கள் வேலை தேடி வெளியில் செல்வதை நிறுத்திவிட்டார்கள். வெளியிடங்களில் வசிக்கின்ற கட்ச் பொதுமக்கள் மீண்டும் தங்கள் கட்ச் பகுதிகளுக்கு திரும்ப வந்து கொண்டிருக்கிறார்கள்.

கட்ச் பகுதியின் வளர்ச்சி குறித்து பல்கலைக்கழகங்களும் ஆய்வாளர்களும் ஒரு வளர்ச்சி மாதிரியாக கொண்டு ஆய்வுகள் நடத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் குஜராத் அரசு விவசாயிகள் நலனுக்காக பல திட்டங்களை கடந்த 20 ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளது சூரிய மின்சார பயன்பாடு மற்றும் உற்பத்தியில் குஜராத் மாநிலம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

21வது நூற்றாண்டின் வளர்சிக்கு மின்சாரத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் தண்ணீர் தேவை கள் பூர்த்தி செய்யப்படுவதும் அவசியம்.நர்மதை நதியின் தண்ணீர் கட்ச் பகுதி மக்களுக்கு பயன்படும் என்று முன்னர் அரசு கூறிய பொழுது அது குறித்து கேலி செய்தவர்கள் இங்கே உள்ளனர் இப்பொழுது நர்மதை நதியின் தண்ணீர் கட்ச் பகுதிக்கு கிடைக்கிறது. கட்ச் மக்களின் முன்னேற்றத்திற்கு நர்மதை நதியின் தண்ணீர் உதவி வருகிறது இவ்வாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.