வக்கீல்களின் எண்ணிக்கை சுமார் 45 சதவீதம் குறைஞ்சிடுச்சு! ஏன் தெரியுமா?

வக்கீல்களின் எண்ணிக்கை சுமார் 45 சதவீதம் குறைஞ்சிடுச்சு! ஏன் தெரியுமா?

வக்கீல் தொழில் ஒழுக்கக்கேட்டையே போதிக்கிறது. வக்கீல் தொழிலுக்கு வருபவர்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்களே ஒழிய துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக அல்ல. பணக்காரர் ஆவதற்கான தொழிலில் வக்கீல் தொழிலும் ஒன்று.மனிதர்களுக்குள் தகராறுகள் ஏற்படும் போது, வக்கீல்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். வக்கீல்களுக்கு வேலை என்பதே இல்லை. இவர்கள் சோம்பேறிகளாக இருப்பவர்கள். இவர்கள் தெய்வப்பிறவியோ என்று ஏழை மக்கள் எண்ணும் வகையில் ஆடம்பரத்தையும் மேற்கொள்கின்றனர்.இவர்கள் சகோதரர்களை விரோதிகள் ஆக்கியிருக்கிறார்கள். இவர்களால் குடும்பங்கள் அழிந்து போயிருக்கின்றன. மக்கள் தங்களின் தகராறுகளை தங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டும்.வக்கீல் தொழில், விபச்சாரத்தை போல இழிவானது என கருதி, வக்கீல்கள் கை விட வேண்டும். வக்கீல் தொழில் குறித்து நீங்கள் நன்றாக அறிந்திருந்தால், எனக்கு இருக்கும் இவ்வெறுப்பே உங்களுக்கும் ஏற்படும். – இதை கூறியவர் மகாத்மா காந்தி..

fake lawers jan 24

ஆனால் இன்றளவும் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் முறையாக பதிவு செய்யாத போலி வக்கீல்கள் பணிகளில் ஈடுபடுவதாகஅவ்வப்போது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழும்தான். அந்த வரிசையில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹருக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது.

இதில், இந்திய பார் கவுன்சில் தலைவர் மனான் குமார் மிஸ்ரா கலந்து ெகாண்டு ேபசும் போது, ‘‘நாடு முழுவதும் ஏராளமான போலி வக்கீல்கள் உலா வருவதாக புகார்கள் வந்ததால், தீவிர ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வுகளுக்கு பின், வக்கீல்களின் எண்ணிக்கை சுமார் 45 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு அகில இந்திய பார் கவுன்சில் தேர்தல் நடந்த போது, சுமார் 14 லட்சம் வக்கீல்கள் வாக்களிக்க பதிவு செய்தனர். இவற்றை தீவிரமாக ஆய்வு செய்ததில் தற்போது 6.5 லட்சம் பேர் மட்டுமே வாக்களிக்க விண்ணப்பம் அளித்திருக்கின்றனர். இதன் மூலம், போலி வக்கீல்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வக்கீல்கள் போர்வையில் உலா வரும் போலி ஆசாமிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றார்.

போலி வக்கீல்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள இந்திய பார் கவுன்சிலை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பாராட்டினார். முறையான பட்டம் பெறாதவர்கள், போலி பட்டம் பெற்றவர்கள் உள்ளிட்ட பல்வேறு போலி வக்கீல்களை கண்டறிந்து அவர்கள் ஏமாற்றுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பார் கவுன்சிலை நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், வக்கீல்கள் பதிவு செய்து கொள்வதில் உள்ள தாமதங்களை நீக்கி முறைப்படுத்த பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர்.

Related Posts

error: Content is protected !!