October 27, 2021

ஆன் லைன் லோக்கல் பர்ச்சேசில் அதிகரித்து வரும் ‘ஆப்பு’

ஆன்லைன் பர்ச்சேஸ் என்பது இப்போது பெரும்பாலா னோரின் விருப்பமா இருக்கு. தனக்கு பிடிச்ச பொருளை ஆர்டர் பண்ணா அந்த பொருள் இரண்டுமூனு நாள்ல வீடுதேடி வந்துடும். இதுக்காக அலையற நேரம் மிச்சம்னு நிறைய பேரு ஆன்லைன் பர்ச்சேஸ்சை விரும்பறாங்க. இதுல நன்மையும் இருக்கு தீமையும் இருக்கு.

online aug 13

பெரிய பெரிய நிறுவனங்கள் இ-காமர்ஸ் எனும் பெயரில் வர்த்தகம் செய்கின்றது. நம்பகத்தன்மை கொண்ட இந்த நிறுவனங்களில் பொருட்கள் வாங்கும்போது, சில சமயங்களில் உடைந்து போன அல்லது செயலிழந்த எலக்ட்ரானிக் அல்லது எலக்ட்ரிக் பொருட்களும், துணிகளாக இருந்தால் ஓல்டு ஸ்டாக் அல்லது டேமேஜ் மற்றும் கலர் போனது இவை எல்லாம் கூட வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிவைத்து விடுகின்றனர். ஒரு சில நிறுவனங்களில் வாங்கும் பொருட்கள் சரியில்லை என்றால் அதனை எந்த நிபந்தனையுமின்றி மாற்றித்தரவும் செய்கின்றனர். வாங்கிய பொருள் திருப்தி இல்லை என்றால் வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தி விடுகின்றனர்.

ஆனால் ஒரு சில நிறுவனங் களில் பணத்தை பெற்றுக்கொண்டபின்னர் வாங்கிய பொருட்களில் திருப்தி இல்லை எனில் வேறு ஏதாவது பொருட்களை வாங்கிக்கொள்ளமுடியுமே தவிர பணமாக பெறமுடியாது. ஆனால் எப்படியோ ஒன்று பணம் திரும்பக்கிடைக்கும். இல்லை என்றால் மாற்றுப்பொருள் கிடைக்கும்.. அதற்கு இந்த இகாமர்ஸ் நிறுவனங்களிடம் உத்திரவாதம் உண்டு.

இதனடிப்படையில் இப்போது சில தனி நபர்களும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் பொருட்கள் வீடுதேடி வரும் என்று விளம்பரம் செய்கின்றார்கள். ‍பேஸ்புக் மூலம் சிலர் தங்களிடம் ஒரிஜினல் செக்கு கடலை எண்ணைய், நல்லெண்ணைய், நெய், ஆர்கானிக் தானியங்கள், மூங்கில் அரிசி, கம்பு, திணை ராகு, வரகு கரிமஞ்சள், போன்றவை இருப்பதாக விளம்பரம் செய்கின்றார்கள். ஒரு சிலர் திருநெல்வேலி அல்வாவிற்கும் விளம்பரம் செய்கின்றார்கள். இவர்களிடம் ஆர்டர் செய்வதற்கு முன்னர் சற்று கவனம் கொள்ள வேண்டியிருக்கு. ஆனால் ஒரு சிலர் ஏமாற்றுவதற்காகவே இந்த தொழிலில் இறங்கியுள்ளனர்.

இவர்கள் பொருட்களை அனுப்புவதற்கு முன்னதாகவே தங்களுடைய வங்கிக்கணக்கினை கொடுத்துவிட்டு அதில் பணம் செலுத்தச் சொல்கின்றனர். பணம் செலுத்தியதும் ஓரிரு நாட்களில் பார்சல் ‍கூரியர் தபால் மூலம் அனுப்பிவைக்கப்படும் என்கின்றனர். ஆனால் சொன்னபடி அனுப்பிவைப்பது இல்லை என்று பரவலாக புகார் வர ஆரம்பித்துள்ளது. பொருட்களை தாமதமாக அனுப்புவது, ஆர்டர் செய்த பொருட்களை அனுப்பாமல் வேறு பொருட்களை அனுப்புவது, மர செக்கு எண்ணைய் என்று பணம் வாங்கிக்கொண்டு கலப்பட எண்ணையை அனுப்புவது, ஒரு சிலர் பணம் பெற்றுக்கொண்ட பின்னர் முறையாக பதில் சொல்லாமல் காலம் கடத்துவது இப்படி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகின்றார்கள்..

திருநெல்வேலி அல்வா ஆர்டர் செய்தால் டோர் டெலிவரி செய்யப்படும் என்ற விளம்பரத்தை நம்பி சமீபத்தில் நண்பர் ஒருவர் ஆர்டர் செய்ததில் டெலிவரி செய்யப்பட்ட அல்வாவை வாயில் வைக்கமுடியாமல் (புளிச்சுப்போனதா சொன்னார்) தூக்கி எறிந்துள்ளார். பணமும் போய் இப்படி ஏமாந்து போய்ட்டோமே என்ற வருத்தத்தோடு சப்ளை செஞ்சவங்ககிட்ட ஃபோன் செஞ்சு கேட்டிருக்கார் முறையான பதிலில்லையாம். சென்னையில் இருக்கிறவர் இந்த விஷயத்துக்காக திருநெல்வேலிக்கு போய் சண்டை போட்டுட்டா வரமுடியும்.?

ஒரு சிலர் மட்டும் இந்த தொழிலை முறையாக நடத்துகின்றனர். இதுபோன்ற ஆன்லைன் வியாபாரத்தில் நம்முடைய முகநூல்நண்பர்தானே என்று நம்பி பணத்தை அனுப்பாதீங்க. உங்கள் பணம் போவதோடு தேவை யில்லாம மனச் சஞ்சலத்துக்கு ஆளாக நேரிடும். ஒருவர் ஒரு பொருளுக்கு விளம்பரம் செய்யறாருன்னா அவர் எந்த ஊர், அங்கே அந்த பொருட்களை அவர் உண்மை யிலேயே தயாரித்து அல்லது ஏஜென்சி எடுத்து வியாபாரம் செய்யறாரா என யாரிடமாவது விசாரித்து ஆர்டர் செய்யறது நல்லது..

நூதன மோசடிகளில் இப்போ இந்த மாதிரி ஆர்கானிக் உணவுகள், மரச்செக்கு எண்ணைய், மூங்கில் அரிசி, இதர தானியங்கள் பார்சல்ல அனுப்பிவைக்கறோம் பணம் எங்க வங்கிக்கணக்குல போடுங்கங்கிறது சேர்ந்திருக்கு.. நாம தான் எல்லாத்திலேயும் உஷார இருக்கனும் போல இருக்கு.. நமக்கு வேணும்கிற ‍பொருளை தேடிக்கண்டு பிடிச்ச நேரா போய் வாங்கிக்கறது தான் பெஸ்ட், அப்படி இல்லையா தெரிந்த நண்பர்கள் அல்லது உறவினர் களிடம் சொல்லி நமக்கு தேவையான தயாரிப்புகளை வாங்கிக்கறது நல்லது..

உதயகுமார்