ஓசி வைஃபையில் பலான படம் பார்ப்பதில் இந்தியர்கள்தான் ஜாஸ்தி!

ஓசி வைஃபையில் பலான படம் பார்ப்பதில் இந்தியர்கள்தான் ஜாஸ்தி!

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில், கணினி, செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சைபர் கிரைம் என்று அழைக்கப்படும் இணையதள குற்றங்களும் அதிகரித்துள்ளன. குறிப்பாக இந்தியாவில் இணைய குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், ஒவ்வொரு 10 நிமிடங்க ளுக்கு ஒருமுறை கணினி தொடர்பான குற்றங்கள் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 27,482 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்தாண்டில் 50 ஆயிரம் வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்தாண்டு குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனிடையே உலக அளவில் விமான நிலையம், ரயில் நிலையம், பெரிய ஹோட்டல்கள், நூலகங்கள் ஆகிய இடங்களில் உள்ள இலவச வைஃபை சேவையை மக்கள் எதற்காக பயன்படுத்துகின்றனர் என்று ஒரு புள்ளிவிவரம் எடுக்கப்பட்டது. இதில் மூன்று பேரில் ஒரு இந்தியர் ஆபாச இணையதளங்களைப் பார்க்க பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் இதுபோல ஆபாச இணையதளங்களை பார்க்கவே மக்கள் இலவச வைஃபை வசதியை பயன்படுத்துகின்றனர் என்கிறது ஆய்வு முடிவு.

உலக அளவில் ஆறில் ஒருவர் இந்த வசதியை தவறாக பயன்படுத்துகின்றனர். ஜப்பான், மெக்ஸிகோ, நெதர்லாந்து, பிரேசில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இப்பட்டியளில் இடம்பிடித்துள்ளன.31 சதவீத மக்கள் தெருக்களிலேயே இலவச வைஃபை வசதியை ஆபாச இணையதளங்கள் பார்க்க பயன்படுத்துகின்றனர். ஹோட்டல்க ளில் 49%, நண்பர்கள் வீடுகளில் 46%, உணவகங்களில் 36%, அலுவலகங்களில் 44 சதவீதத்தினரும் இந்த வசதியை தவறாக உபயோகிக்கின்றனர்.

Related Posts

error: Content is protected !!