அந்தக்காலத்தில் பட்டதாரி நடிகர் எஸ்.வி.ரங்காராவ் B.Sc.!

அந்தக்காலத்தில் பட்டதாரி நடிகர் எஸ்.வி.ரங்காராவ் B.Sc.!

தன் வாழ்நாளில் முதுமையைப் பார்த்தறியாத ஒருவர் திரைப் படங்களில் இருபத்தைந்து வருடங்கள். 1950களில், 1960களில்,1970களின்முன்பகுதியில் ) நிறைய வயதான,முதிய கதாப் பாத்திரங்கள் செய்திருக்கிறார் என்பது விந்தை. எழுபது வயது மனிதராக சினிமா காட்டிய எஸ்.வி ரங்காராவ் அறுபது வயதை தன் வாழ்நாளில் கண்டதில்லை. 1974 ல் அவர் மறைந்த போது அவர் வயது 56 தான். தெலுங்கு ,தமிழ் படங்களில் நடித்தவர் . தெலுங்கு மக்கள் இவருக்கு ‘விஸ்வநாத சக்ரவர்த்தி ‘ என பட்டம் அளித்தார்கள். அந்தப் பட்டம் தமிழ் பட டைட்டிலில் யாரும் பார்த்திருக்க முடியாது.

அந்தக்காலத்தில் பட்டதாரி நடிகர் எஸ்.வி.ரங்காராவ் B.Sc.

நாடகமேடையில் ஆங்கில நாடகங்களில் நடித்த Shakespearean Actor!நாடகங்களில் நடித்திருந்தாலும், திரைப் படங்களில் புராண கதா பாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட நாடக செயற்கைத்தனம் இல்லாமல் ரொம்ப இயல்பாக நடித்து அளப்பரிய சாதனை செய்தார்.
ஒரு தெலுங்கு நடிகர் தமிழ் படங்களில் செய்த சாதனை அசாதாரணமானது.

Scene Stealer! ஆஜானுபாகுவான ரங்காராவ் ஒரு காட்சியில் இருந்தால் இவர் தான் Scene Stealer!எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுவார்.

தேவதாஸ், மிஸ்ஸியம்மா ஆரம்பித்து. ‘நானும் ஒரு பெண் ‘மாமனார் -மருமகள் உறவு.விஜயகுமாரியின் மாமனாராக. ‘கற்பகம் ‘ ஜெமினி கணேஷின் மாமனாராக. ‘அப்பா ‘ ரோல் திரைப் படங்களில் ரொம்ப மலிவானது. அதை மிகவும் உயர்த்திக் காட்டியவர் எஸ்.வி.ரங்காராவ்.’கண் கண்ட தெய்வம் ‘ படத்தில் சுப்பையாவின் ‘அண்ணன் ‘ ரோல்!அவர் செய்த புராண பாத்திரங்கள்.

வில்லனாக ‘நம் நாடு ‘ படத்தில் ‘பக்த பிரகலாதா’வில்
‘மாயா பஜாரில் ‘ கடோத்கஜனாக “கல்யாண சமையல் சாதம் !”
சபாஷ் மீனா, எங்க வீட்டு பிள்ளை, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் அவருடைய இயல்பான நகைச்சுவை.
தெலுங்கில் இவர் இயக்கிய இரண்டு படங்கள் நந்தி விருது பெற்றிருக்கின்றன. இயக்குனரும் கூட!

இந்தோனேசியாவில் ஒரு திரைப்படவிழாவில் இவர் ‘நர்த்தன சாலா’ என்ற படத்தில் கீசகனாக நடித்ததற்காக ஒரு விருது வாங்கியிருக்கிறார்.மற்ற படி இந்திய அரசாங்க கெளரவம் எதுவும் இவருக்கு கிடைத்ததில்லை.
உலகத்தின் மிகச் சிறந்த அபூர்வ நடிகர்களில் ஒருவர் எஸ்.வி.ரங்காராவ்.

இன்று டி.வி சேனல்களில் எவ்வளவோ நடிகர்களை பலரும் மிமிக்ரி செய்வதைப் பார்க்கமுடியும். மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஒருவர் கூட இதுவரை மிகப் பெரிய நடிகர் ரங்காராவை இமிடேட் செய்ததே கிடையாது. ரங்காராவின் தனித்துவத்திற்கு இது கூட உதாரணம். அவ்வளவு நுட்பமானது அவரது நடிப்பின் பரிமாணங்கள்!முதியவராக நடித்தார். ஆனாலும் இவரை ஒரு வட்டத்துக்குள் அடைத்து Brandசெய்துவிட முடியாது.

ஒரு பேட்டியில் கமல் ஹாசன் விகடன் மேடையில் வாசகர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது தான் சந்திக்க ஆசைப்பட்டு, சந்திக்க முடியாமலே போனவர்கள் என்று மூன்று பேரை பட்டியலிட்டார்.
அந்த மூவர்
மகாத்மா காந்தி,
மஹாகவி பாரதி,
எஸ்.வி.ரங்காராவ்.

®R.P.ராஜநாயஹம்

எஸ்.வி. ரங்காராவ் பிறந்த நாளின்று

error: Content is protected !!