விஜய் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா டைரக்ட் செஞ்ச ‘குஷி’ ரிலீஸான தினமின்று!

விஜய் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா டைரக்ட் செஞ்ச ‘குஷி’ ரிலீஸான தினமின்று!

ம்ம தமிழ் சினிமாவில் நூத்துக்கணக்கான காதல் படங்கள் வந்துருக்குது. அவற்றில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடிச்சவை மினிமம் நூறாவது இருக்கும். அந்த நூறு திரைப்படங்களில் மூன்று திரைப்படங்கள் 2000-ம் வருசத்தின் கோடைக்காலத்தில் வெளியாச்சு. மணிரத்னத்தின் ‘அலைபாயுதே’, ராஜீவ் மேனன் இயக்கிய ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய ‘குஷி’- இவைதான் அந்த மூன்று படங்கள். இவற்றில் ‘குஷி’, மே 19 அன்று வெளியானது. இன்றோடு அந்தப் படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

அந்த ’குஷி’ பல வகைகளில் விஜய்க்கு வித்தியாசமான படமாக அமைஞ்சுது. வெளிநாட்டுக்குப் போய் படிக்க விரும்பும் பணக்கார இளைஞராக நடிச்சிருந்தார். முதல் முறையாக நெற்றிக்கு மேலே இருக்கும் முன்பக்கத் தலைமுடி மட்டும் சுருளாக இருக்கும் ‘கர்லிங் ஹேர்’ கெட்டப்பில் தோன்றினார். இந்த கெட்டப் ரசிகர்களிடம் பிரபலமடைய இதுவே காரணமாச்சு. மேலும் பல படங்களில் இந்த கெட்டப்பை தக்க வைத்தார். நடிப்பிலும் அதிக வசனம் சாராத எக்ஸ்பிரஷன்கள் வழியிலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். விஜய்யின் கதாபாத்திரம், கெட்டப், உடல் மொழி, நடிப்பு என அனைத்தும் வித்தியாசமாக அமைந்திருச்சு.

‘குஷி’ படத்தின் வெற்றி இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவை மொழி எல்லைகளைக் கடக்கச் செய்தது. இதே கதையை தெலுங்கில் பவன் கல்யாண் – பூமிகாவை வைத்து மறு ஆக்கம் செய்தார். புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். 2001-ல் ‘குஷி’ என்ற தலைப்பிலேயே வெளியான தெலுங்குப் படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. இதே கதையை இந்தியிலும் இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் எஸ்.ஜே.சூர்யா, இந்திப் பதிப்பை ஸ்ரீதேவியின் கணவரும் பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவருமான போனி கபூர் தயாரித்திருந்தார். ஃபர்தீன் கான், கரீனா கபூர் நடித்திருந்த இந்தி மறு ஆக்கம் 2003-ல் வெளியாகி வெற்றி பெற்றுச்சு. எல்லாவற்றையும்விட இன்னிக்கு தொலைக்காட்சியில் போட்டால்கூட டி.ஆர்.பி எகிறவைக்கும் படம் ‘குஷி’. காலத்தால் அழியாத காதல் படங்களில் இடம்பிடித்த காதல் படங்களின் பட்டியலில் இந்தப் படத்துக்கு நிச்சயம் இடம் உண்டு.

இது குறிச்சு எஸ்.ஜே.சூர்யாவிடம் வாழ்த்து சொல்லி பேச்சு கொடுத்த போது, “சில நேரங்களில் எதிர்பாராத அதிர்ஷ்டம், எல்லை தாண்டி வந்து ஹாய் சொல்லும். அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் அவமானங்கள் வந்து கதவைத் தட்டும். நினைச்ச படி இதுதான் வாழ்க்கையும் கூட. நினைத்தபடியே எல்லாம் நடந்துடுமா என்ன? இப்படி சினிமாவில் உல்டாவாக மாறிய ஏகப்பட்ட படங்கள் உண்டு. நான் ஒரு ஹீரோவை மனதில் வைச்சு கதையை உருவாக்கி இருந்தால், அந்த கதை வேறொரு ஹீரோவுக்குச் சென்றிருக்கும். அது ஹிட்டாகி இருக்கலாம். ஆகாமலும் போயிருக்கலாம். புதுமுகங்களுக்கு உருவாக்கிய கதை, பெரிய ஹீரோ நடிப்பிலும் வந்திருக்கும்.

பொதுவாக ‘கதையை வெளியில சொல்லமாட்டேன்’ என்கிற இயக்குனர்களுக்கு மத்தியில், இதுதான் கதை, எப்படி முடியுதுன்னு பாருங்க, என்று ஆரம்பத்திலேயே கதையை விளக்கி சொல்லி இருந்த அந்தப் படத்தில். தாளம் போட வைக்கும் பாடல்களும், கண்களில் ஒற்றிக் கொள்ளும்படியான ஒளிப்பதிவும் பெரிய பிளஸ்.

அது எனக்கு இரண்டாவது படம். ஆனால், முதல் படமாக வந்திருக்க வேண்டிய கதை! அப்போ, அஜித்தின் ‘ராசி’ படம் ரிலீஸ் ஆகி, சுமாரான வெற்றியை பெற்றிருந்த நேரம். அப்போ ‘வாலி’ கதையை அஜித்துக்குச் சொல்லி இருந்தேன். படத்தை நிக் ஆர்ட்ஸ் தயாரிக்க இருந்துச்சு. ஆனா ‘ராசி’ சுமார் ஹிட் என்பதால், ‘வாலி’யை உடனடியாக புரொடக்ஷ்னால் தொடங்க முடியலை. தள்ளிக் கொண்டே போச்சு.

இதுக்கிடையிலே இயக்குனர் பாரதிராஜாவிடம் கதை ஒன்றைச் சொல்லி இருந்தேன். அவர் மகன் மனோஜ் ஹீரோவாக நடிப்பதற்காகச் சொல்லப்பட்ட கதை அது. பாரதிராஜா, தனது மனோஜ் கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிச்சு இயக்குவதாக இருந்தார். அந்த கதைதான், குஷி! என்னோட ‘வாலி’ தள்ளிக்கொண்டே போனதால், பாரதிராஜா என்னை அழைத்தார்

ஆனால், ‘என்னை மதிச்சு கதை கேட்டு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் அஜித். எவ்வளவு லேட் ஆனாலும் இந்தப் படத்தை முடிச்சுட்டு வருவேன்’ அப்ப்டீன்னு பாரதிராஜாவுக்கு டச்சிங்காக கடிதம் எழுதினேன்

என் ஃபீலிங்கை புரிஞ்சிகிட்ட பி பாரதிராஜா, மனோஜ் நடிப்பில் ‘தாஜ்மஹாலை’ தொடங்கினார்.

நான் வாலி’யை இயக்கி ஹிட். கொடுத்துட்டு ‘குஷி’யை எடுத்து அதுவும் ஹிட் ஆச்சு.. அதுனாலே மறுபடியும் சொல்றேன் வாழ்க்கை என்னும் பரீட்சையில் இதயம் சொல்லும் சொல்லை நம்பி தோல்வியடைந்து விடக் கூடாது.. மூளையின் சொல் கேட்டு வாழ்க்கையில் முன்னேறி வெற்றி அடைய சான்ஸ் அதிகம்.! – அப்படீன்னார்

கட்டிங் கண்ணையா

error: Content is protected !!