February 7, 2023

அந்தக்கால பிட் படம் போல் .வம்பு தலைப்பிடும் யூ டியூப் வாயர்கள்!

வெளிப்படை பெண்கள் vs ஸ்மார்ட் பெண்கள். இவர்களைப்பற்றிய சைக்காலஜி குறிப்புகள், பர்சானலிடி தியரிக்கள் உருவாக்க வேண்டும்.. நடக்குமெனில் நடக்கும். ஒரு சைக்காலஜிக்கள் அப்ரோச் பிக் பாசில் கவினிக்கும் பொழுது பெண்களை அடித்துவிட்டோம் என்ற பதற்றம் சுரேஷிடம் தெரிந்தது. நல்ல ஆளுமைதான். பிக் பாஸ் விளையாட்டின் பொழுது இரு பக்க கத்தி. தடம் புரளாமல் கடினம். இதில் ஸ்கோர் செய்யப்போகும் கூட இருக்கும் நட்பு போட்டியாளர்கள் வேறு. வனிதா அங்கு இருக்கும் பொழுது தெரிந்தே விளையாடி தன் இடத்தை தக்க வைத்தார்.

உடனே மீடியாக்கள் .இப்பொழுது எல்லாம் யூ டுயூப் வாயர்கள் ( முடில..அந்த கேப்ஷன்கள்) ” கதறி கதறி அழும் வனிதா” மன்னிப்பு கேட்ட வனிதா, தவறை உணர்ந்த, சாபப் விட்ட என ஒற்றை விடியோவில் ஓராயிரம் கேப்ஷன்கள், பிரேம்கள். ஜன நாயகம் நல்லதுதான். கட்டுப்பாடற்ற ஜனநாயகம் எத்தனை மோசம் என யூ டியூப் போனால் கவனிக்கலாம்.

வனிதா மிக வெளிப்படை. இதுதான் ஆரம்பத்தில் இருந்து இவருக்கு நல்லதும், சவாலும். அவரின் சகோதரிகள், நட்புகள் மிக ஸ்மார்ட்டாக வெளிக்காட்டாமல் இருக்கின்றனர். எல்லாருக்கும் இருப்பக்கம் உண்டு. மறைத்துக்கொள்வது இல்லையெனில் வெளியேறுவது. ஒன்று வெளிப்படையாக பேசுவது.

இதில் மூன்றாவது ஆணாக இருந்தால் நேர்மை. பெண்ணாக இருப்பின் வாயாடி, குடும்ப விஷயத்தை போட்டு உடைக்கிறார் என பலப்பெயர்கள். சொல்வெதெல்லாம் உண்மையில் பிரகாஷ் ராஜ், ஆட்டோகிராபில் சேரன் என காதலிகளை, இணைகள் பற்றி பேசினாலும் அவர்கள் நேர்மையாளர்களாக உலகம் கொண்டாடுகிறது.

இதே வனிதா பேசும் பொழுது. அவள், இவள் எனப் பேசுகிறது எப்படி இருப்பினும் இது அத்தனையும் வனிதாக்கு பண வரவாக மாறும் என்பதில் ஒரு சின்ன திருப்திதான்.ஒரு ஆண் தனியாக வாழ்வைதை விட பெண் அதுவும் அழகா இருப்பவர் வாழ்வது பெரும் சிக்கல்

ஆண் இல்லாத பெண்ணை பல தமிழக ஆண்கள் தனக்கே என்று வட்டம் கட்டி பாயும் மனம் இருக்கும். எப்படி எல்லாம் வளைக்கலாம் என இணையத்திலேயே பார்க்கிறோம். ஒருவன் ஸ்பாம் பாக்ஸில் அலுக்காமல் இரு வருடம் குட் மார்னிங் அனுப்ப முடிகிறது என்றால் எத்தனை பொறுமை..ஒரு பெண் திரும்பி பார்க்க ஒரு நாள், நேரம் தவறா உழைப்பு. அப்படி இங்கேயே இப்படி எனில் .தனி அதும் சினிமா வாழ்வில். ..நினைத்தாலே ஒரு மாதிரிதான்

அப்பொழுதான் தந்தை அன்பை நினைக்கிறாள். ஆண் துணை அதை தருகிறது. நிஜம் என நம்பி வாழ்வில் இறங்கும் பொழுது மனைவி. பிரச்சனை. நல்லவேளை சாமர்த்தியமாக லாயர் சொன்னப்படி நிச்சயம்தான் திருமணம் இல்லை என்று விட்டார். இவரின் வெளிப்படை பேச்சுதான் இவரின் மிகப்பெரிய சிக்கல் என நினைத்தேன். இப்பொழுது அதுதான் அவரை காப்பாற்றியும் இருக்கிறது

கோவிட் ஆகட்டும் திருமண முறிவு ஆகட்டும் வெளிப்படையாக அறிவித்து விட்டு , ஏமாந்ததை , தோல்வியை ஒப்புக்கொண்டு வெளியேறுவது மிக நல்ல செயல். இதை முதன் முதலில் நேர்மையாக செய்த வனிதாவிற்கு பாராட்டுகள்.

சென்ற உறவிற்கும், இருக்கும் உறவிற்கும் நேர்மையாக இருப்பது மிக அவசியம். ஆம் நீ வேண்டாம் என்பதில் தெளிவு . இவர்களுடன் இனி வாழ்வு என்பதில் முடிவு. அதுவும் சரி வராவிடில் சரியான சமயத்தில் வெளியேற்றம்

ஹேட்ஸ் ஆஃப். உங்கள் பிரச்சனை எந்தப்பெண்ணிற்கும் வரக்கூடாது ..க்வாரண்டைன் திருமணத்தில் எனக்கு விமர்சனம் உண்டு. அது உங்கள் விருப்பம்.

இருப்பினும் இன்று மீடியாவில் வந்து பேசியது. நீங்கள் ஒரு எடுத்துக்காட்டான விஷயத்தை செய்து இருக்கீங்க .. கொடுமையான வாழ்வை யாரும் வாழத்தேவையில்லை.

உடன் வெளியேறு. அதை வெளியில் சொல்.
உறவில் நேர்மையாக இரு.
தட்ஸ் ஆல்

யூ டியூப் வாயர்கள்..அடுத்த ஆண் யார் என தேடி தேடி படையெடுக்கின்றனர். தன் வீட்டிலும் எல்லாம் பறிப்போகும் , ஏதும் நிச்சயமில்லை என அறியாமல் .

என்ன சமூகமோ .. அட்டையை நம்பி பார்த்துவிடாதீர்கள்..அத்தனையும் ஜோடிப்பு.. அக்கால பிட் படம் போல் .வம்பு தலைப்பு படங்கள். நேரத்திற்கு கேடு

இக்கட்டுரை எழுதியதுப்போல்..
வாசிப்பதுப்போல். 🙂

கீர்த்திகாதரன்