‘அப்படி’ இருந்த சிரியா ஓம்ரான் இப்ப ‘ எப்படி ’ இருக்கான் தெரியுமா?

‘அப்படி’ இருந்த சிரியா ஓம்ரான் இப்ப ‘ எப்படி ’ இருக்கான் தெரியுமா?

சிரியாவில் இன்றளவும் பல முனை உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது. அந்த நாட்டின் 2-வது பெரிய நகரான அலெப்போவின் பெரும்பகுதி எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. மற்றொரு பகுதி அதிபர் ஆசாத் வசமும், இதர பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமும் உள்ளது. அலெப்போ நகரம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர மூன்று தரப்பினரும் பரஸ்பரம் போரில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு இந்தப் பின்னணியில் எதிர்க்கட்சிகள் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ பகுதி மீது அரசுப் படைகள் வான்வழி தாக்குதல் நடத்தின. இதில் குடியிருப்பு பகுதிகளில் குண்டுகள் விழுந்து வீடுகள் தரைமட்டமாகின. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர். ‘வொயிட் ஹெல்மெட்’ என்ற தன்னார்வ அமைப்பினர் நேற்று முன்தினம் இரவு முழுவதும் போராடி அவர்களை மீட்டனர். அப்போது ஓமரான் தாக்னிஷ் என்ற 5 வயது சிறுவன் கட்டிட இடிபாடுகளில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டான். ரத்தம் தோய்ந்த நிலையில் உடல் முழுவதும் தூசி படிந்து திகைப்புடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அமர்ந்திருக்கும் அந்த சிறுவனின் வீடியோ, புகைப்படத்தை ‘வொயிட் ஹெல்மெட்’ அமைப்பினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ, புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தூசி படிந்த உடலில் தலை மற்றும் கண்ணில் ரத்த காயங்களுடன் சிறுவன் ஒருவன் அமர்திருந்த புகைப்படமும், வீடியோவும் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சமூக வலைதளங்களில் இன்றளவும் வைரலாக பகிரப்பட்டது.

இந்த நிலையில் ஓம்ரான் தற்போது எவ்வாறு உள்ளார் என்ற புகைப்படங்கள் சிரிய ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அப்புகைப்படங்களில் நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படும் ஓம்ரான் அரசு கட்டுபாட்டிலுள்ள அலெப்போ நகரில் அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார். ஓம்ரான் அவரது பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தை பத்திரிக்கையாளர் கினானா அல்லுஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் மீண்டும் ஓம்ரான் புகைப்படங்கள் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.

Related Posts

error: Content is protected !!