ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு தெரியுமா?

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு தெரியுமா?

75 வது சுதந்திர தினமான இன்று ஓலா நிறுவனம் தனது S1 மற்றும் S1 Pro என இருவகையாக ஸ்கூட்டர் மாடல்களை இன்று அபிஷியலாக அறிமுகம் செய்து உள்ளது.அதன்படி,S1 வகை ஸ்கூட்டரின் அதிகபட்ச விலை ரூ.99,999 மற்றும் S1 Pro வகை ஸ்கூட்டரின் விலை ரூ.1,29,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சார வாகனங்களுக்கு குஜராத் மாநிலம் அதிகபட்ச மானியம் வழங்குவதால் அங்கு இவ்வாகனம் ரூ.20,000 குறைவாக ரூ.79,999 என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் கிடைக்கும்.அதற்கு அடுத்தப்படியாக காற்று மாசினால் திண்டாடும் டில்லியும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கிறது. அங்கு ரூ.85,099-க்கும், ராஜஸ்தானில் ரூ.89,968-க்கும், மஹாராஷ்டிராவில் ரூ.94,999-க்கும் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் தயாரானாலும் இங்கு பிரத்யேக மானியம் இல்லாததால் ஒரு லட்சம் தந்தே வாங்க வேண்டியிருக்கும் என்பதுதான் சோகம்.

வாகனங்களுக்கான பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வால்,பெரும்பாலான மக்கள் மின்சார வாகனங்களின் பக்கம் தங்களது கவனத்தை செலுத்தியுள்ளனர்.இதனால்,இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. அந்த வகையில்,ஓலா இ-ஸ்கூட்டர் முன்பதிவு https://olaelectric.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி கடந்த ஜூலை 16 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது குறித்து விரிவான தகவல் நம் ஆந்தை ரிப்போர்ட்டர் டாட் காம்-மில் வந்தது நினைவிருக்கும்.

இந்நிலையில்தான் 75 வது சுதந்திர தினமான இன்று ஓலா நிறுவனம் தனது S1 மற்றும் S1 Pro என இருவகையாக ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்து விலையையும் அறிவித்துள்ளது.அதன்படி,S1 வகை ஸ்கூட்டரின் அதிகபட்ச விலை ரூ.99,999 மற்றும் S1 Pro வகை ஸ்கூட்டரின் விலை ரூ.1,29,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த S1 மாடல் ஓலா ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 121 கி.மீ வரை பயணம் செய்யலாம்.இதன் அதிகபட்ச வேகம் 90 கி.மீ ற்றும் 3.6 வினாடிகளில் 0 முதல் 40 கிமீ வேகத்தை எட்டும்.அதேபோல,S1 PRO மாடல் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 181கி.மீ வரை பயணம் செய்யலாம்.இதன் அதிகபட்ச வேகம் 115 கி.மீ. மற்றும் 3 வினாடிகளில் 0-40 கிமீ வேகத்தையும், 5- வினாடிகளில் 0-60 கிமீ வேகத்தையும் அடைய முடியும்.மேலும்,எஸ் 1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நார்மல், ஸ்போர்ட் மற்றும் ஹைப்பர் ஆகிய 3 வகையான பயண நிலைகள்(ரைடிங் மோட்களும்) உள்ளன.

இவ்விரு ஸ்கூட்டர்களும் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்றும் மற்றும் அக்டோபரில் டெலிவரி தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!