March 27, 2023

சென்னை கோர்ட்டுகளில் 8ம் வகுப்பு பாஸ் செய்தவர்களுக்கு அசிஸ்டெண்ட் ஜாப்!

சென்னையிலுள்ள பெரு நகர குற்றவியல் நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் 18ஐ நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது: இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட் பட்டவராகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினராக இருந்தால் 35 வயதுக்கு உட்பட்டவர்களும், பி.சி., எம்.பி.சி., பிரிவினராக இருந்தால் 32 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த இடங்கள் இனச்சுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளன என்பதை அறியவும்.

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, அத்துடன் கல்வி, சாதி மற்றும் பிற சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பமிட்டு தபாலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை பதிவு தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அனுப்பும் தபால் உறையின் மீது விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை தெளிவாகக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். புகைப்படம், கையெழுத்தினை குறிப்பிட்ட இடத்தில் சரியாக நிரப்ப வேண்டும்.

முகவரி: தலைமை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிபதி,
தலைமை பெரு நகர குற்றவியல்
நடுவர் நீதிமன்றம்,
எழும்பூர், சென்னை 600 008.

விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள் 
: 1.3.2019, மாலை 5:45 மணி

விபரங்களுக்கு :  ஆந்தை வேலைவாய்ப்பு!