October 19, 2021

ஓடு ராஜா ஓடு – திரை விமர்சனம்! = திரைக்கதையில் வித்தியாசம்!

எல்லா மொழியிலும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் சினிமாவுக்கு தனி மவுசு உண்டு என்பதை புரிந்து கொண்டு தயாரான படம்தான் ‘ஓடு ராஜா ஓடு’. வேலை வெட்டி இல்லாத கணவனுக்கு – நர்ஸ் பணி புரியும் மனைவிக்குமான குடும்பப் பிரச்சினை தொடங்கி சமூகத்தில் ஆங்காங்கே நடக்கும் பல்வேறு அவல வாழ்க்கைகளை  இப்போது இல்லந்தோறும் இடம் பெறும் செட்டாப் பாக்ஸ் துணையோடு டார்க் ஹியூமர் பாணியில் சொல்கிறது ஓடு ராஜா ஓடு.

இந்தப் படத்தை தியேட்டரில் நம் அருகில் அமர்ந்து படம் பார்த்து விட்டு வெளியே வந்த ஒரு நண்பர் போனில், “இந்த படத்தோட கதையை சொல்லி புரிய வைக்க முடியாது, திரையில் பார்த்து தான் புரிந்துக் கொள்ள முடியும். கதையும் புதுசு -அப்படீன்னெல்லாம் சொல்ல முடியாது. நான்கு வேறே வேற கதைகள், அந்த கதைகளில் வரும் கேரக்டர்களுக்கு சில தேடல்கள், அதைத் தேடி செல்லும் போது, சம்மந்தமில்லாத கதைகளும், அதில் வரும் சம்மந்தமில்லாத கதாபாத்திரங் களும், ஒன்றுடன் ஒன்று தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள, அதன் மூலம் ஏற்படும் குழப்பங்களும், பாதிப்புகளும், பிறகு அவற்றுக்கான தீர்வும் தான் படத்தின் கதை” என்று சொன்னதுதான் நிஜம்

கொஞ்சம் விளக்கமாக சொல்வதானால் வேலை வெட்டிக்கு போகாம வீட்டோடு கணவர் உத்தியோகம் பார்க்கும் மனோகர் (குரு சோமசுந்தரம்), அப்பப்போ தான் எழுத்தாளர் என்று பீற்றி கொள்வது வாடிக்கை.அவரது மனைவி மீரா (லட்சுமி பிரியா) கமலின் விஸ்வரூபம் படம் பார்ப்ப தற்காக உடனே ஒரு செட்டாப் பாக்ஸ் வாங்கி வரச் சொல்லி பணம் கொடுத்து அனுப்புகிறார். இதற் காக தனது கஞ்சா வியாபாரி நண்பர் பீட்டருடன் செட்டாப் பாக்ஸ் வாங்க செல்லும் மனோகர், கடை திறக்கப்படாததால் கடை வாசலில் இருவரும் காத்திருக்க அங்கே குரு சோமசுந்தரத்தின் நண்பரை  பார்க்க வரும் ஒரு நபரால், குரு சோம சுந்தரத்தின் பணம் பறிபோகிறது. அந்த பணத்தை தேடி போகும் குரு சோமசுந்தரம் & ப்ரண்ட், அங்கே நண்பனின் பாஸ் கஜபதி கண்ணில் பட்டு விடுகிறார் கள். அந்த கஜா பாஸ் இந்த இருவரையும் நம்பி வெயிட்டா ஒரு தொகையை கொடுத்து, போதை மாமி (அப்படித்தாங்க பெயர் வெச்சுருக்காங்க) மங்களத்திடம் போதை ஐட்டம் வாங்கி வர அனுப்பு கிறார். ஆனா அப்படி கைக்கு வந்த பணத்தை ஹீரோவும், பிரண்டும் தொலைக்க நேரிட, இருவரும் தப்பித்தால் போதும் என ஓட ஆரம்பிக்கிறார்கள்.

இதுக்கிடையில் பழைய தாதா காளிமுத்துவை (நாசர்) லயன் (கால பைரவி) மூலம் கொல்ல திட்டமிடுகிறார் அவரது சொந்த தம்பியும் வீரபத்திரனின் எதிரியுமான செல்லமுத்து. மற்றொரு புறம் காளிமுத்துவை பழிவாங்குவதற்காக நகுல் (அனந்த் சாமி), அவரது நண்பன் இம்ரான் மற்றும் மனைவி மேரியுடன் (ஆஷிகா)சேர்ந்து திட்டம் தீட்டுகிறார். அதே சமயம் குப்பத்தில் வாழும் சிறுமி மலரும் (பேபி ஹரினி), சிறுவன் சத்யாவும் (மாஸ்டர் ராகுல்), மனோகரிடம் இருந்து பணத்தை அடித்து ஜாலியாக ஊர் சுற்றுகிறார்கள். இப்படி தனித்தனியே நடக்கும் சம்பவங்கள் ஓரு கட்டகத்தில் ஓரே இடத்திற்கு வந்து நிற்கிறது. இதுதான் கதை.

படத்திற்கான கதைக்கு இயக்குநர் டீம் யோசித்ததை விட படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டருக் கும் ஒரு அடைமொழி, சீட்டாகை, அன்புள்ள அரிப்பு, போதை மாமி, துணை மாப்பிள்ளை, ஒப்புக்கு சப்பான்ஸ் என வைத்து அவர்களுக்கு தனித்தனி ப்ளாஷ்பேக் காட்சிகளுக்கு மெனக்கெட்டு இருக் கிறார்கள். எடுத்து கொண்டது டார்க் ஹியூமர் கதை என்பதால் படத்தில் வரும் அத்தனை கதா பாத்திரங்களுக்கு நியாயம் செய்ய நினைத்திருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள் நிஷாந்தும், ஜத்தினும்.

ஆனால் இந்த இரட்டையர்கள் பெரும்பாலான பெண்களை பெட்ரூம் பிராப்பர்டிகளாகவே காட்டியிருப்பது டூ மச்.. மேலும் எப்போது பார்த்தாலும் கஞ்சா புகைக்கும் நண்பன், செக்ஸ் உணர்வோடு அலையும் பக்கத்து வீட்டுக்காரன், கணவனையும் அவனது நண்பனையும் ஒன்றாக பாக்கும் ஆகிஷா, பீட்டருடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் சோனா என ஒவ்வாத விஷயங்கள் அதிகம்.

அறுந்த வாலாக வரும் பேபி ஹரினியும், ரோட்சைட் ரோமியோ மாஸ்டர் ராகுலும் கவனம் ஈர்க்கிறார்கள். அதுபோல வில்லன் ரவிந்திர விஜய்யும் கிடைத்த கேப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

டோஷ் நந்தாவின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும் பின்னணி இசையில் சபாஷ் பெற்றுவிடுகிறார். அதேபோல் ஜஸ்டின் சங்கர் ராஜ் மற்றும் சுனில் சி.கே ஆகியோரது ஒளிப் பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. இயக்குநர்கள் நிதிஷ் ரவிந்திரன் மற்றும் ஜஸ்டின் சங்கர் ராஜ் இருவரும் திரைக்கதையை கையாண்ட விதம் ரொம்ப நேர்த்தியாக இருந்தாலும், அதை காட்சிப்படுத்திய விதத்தில், வித்தியாசம் என்ற பெயரில் நிறைய குழப்பத்தை கொடுத்த நிலையிலும் நிறைய ரசிக்கவும் வைத்திருக்கிறார்கள்.

சூதுகவ்வும், மூடர்கூடம் போன்ற டார்க் காமெடி கதையம்சம் கொண்ட படங்கள் தமிழ் சினிமாவில் வந்து ஹிட் அடித்திருக்கிறது, அவை ஒவ்வொன்றும் திரைக்கதையின் பலத்தால் ஜெயித்திருக் கிறது. அந்த வகையில், இந்த ‘ஓடு ராஜா ஓடு’ படமும் திரைக்கதையில் வித்தியாசத்தை காட்டி ரசிகர்களுக்கு கொஞ்சம் நிறைவை கொடுப்பதென்னவோ நிஜம்

மார்க் 5 / 3.25