June 30, 2022

நயன்தாரா நடிப்பில் உருவான ஓ 2 (ஆக்ஸிஜன்) படத்தின் டீசர்…!

யன்தாரா, ரித்விக் உள்பட பலரது நடிப்பில் ஜி கே விக்னேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘O2′ . இந்த படம் விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீஸர் இன்று வெளியாகி உள்ளது.

உயிர்கள் வாழ அடிப்படை தேவையான ஆக்ஸிஜனை குறிக்கும் O2 அறிவியல் பெயரில் தயாராகி இருக்கும் இதில் பதட்டப்படாமல், அமைதியாக சண்டை போடாமல் இருந்தால் 12 மணி நேரம் உயிரோடு இருக்கலாம் என நயன்தாரா ஒரு குழந்தையை கையில் வைத்து கொண்டு பேசும் வசனம் மட்டும் உள்ளது. இந்த டீசரின் ஒரு நிமிட காட்சிகளும் செம த்ரிலிங்கான இருப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் சந்திரசேகர் இசையில் தமிழழகன் ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு தயாரித்துள்ளனர். கடந்த ஆண்டில் இருந்தே இந்தப் படம் ஓடிடியில் வெளியாகுவதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தன.  இதன் தொடர்ச்சியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் O2 வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.