April 2, 2023

ஓ.பன்னீர்செல்வம் – பேரைக் கேட்டாலே பிடிக்கலை – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்! வீடியோ

.பன்னீர்செல்வம் பச்சோந்தியை விட மோசமாக நடந்துகொள்கிறார்..அவரை ஒரு போதும் தொண்டர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில், நடைபெற்ற வன்முறை சம்பவம் காரணமாக, அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இந்நிலையில் 72 நாட்கள் பிறகு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்குள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, ஜூலை 11ம் தேதி நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து பேசினார். அதாவது “எதிர்கால நன்மையைக் கருதி ஒற்றைத் தலைமை வேண்டும் என முடிவு செய்தும், அதோடு இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்ததற்கும் கழக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைய ஆட்சியாளர்கள் வேண்டுமென்றே கடந்த 11 ஆம் தேதி பொதுக்குழு நடந்து கொண்டிருந்த நேரத்தில் தலைமை அலுவலகத்தில் கதவுகளை உடைத்து ஒரு சிலர் புகுந்து அறைக்குள் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை எல்லாம் சேதப்படுத்தி, அந்த பொருட்களை எல்லாம் வெளியே கொண்டுவந்து தீயை வைத்து கொளுத்தியுள்ளனர்.

பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள். கழகத்திற்கு சொந்தமான இடங்களின் பத்திரங்கள் எல்லாம் தலைமைக் கழகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது. அதையும் அந்த பத்திரங்களையும் திருடி சென்றிருக்கிறார்கள். தலைமை கழகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை சேதப்படுத்தியிருக்கிறார்கள். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டும் திமுக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தனைக்கும் கட்சியின் உயர்ந்த பதவியில் இருந்தவர் ஓபிஎஸ். கொள்ளை கூட்டத்துடன் போலீசார் பாதுகாப்புடன் வந்து கட்சி தலைமையகத்தில் அராஜகம் நிகழ்த்தியிருக்கிறார். இதை தொண்டர்கள் ஏற்று கொள்ளவே மாட்டர்கள்

உயர்நீதிமன்ற தீர்ப்பால்தான் தலைமை கழகம் எங்களுக்கு கிடைத்தது. விரைவாக பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் பணி தொடரும். அதிமுகவிற்கு பிளவு என்பதே கிடையாது” என்று தெரிவித்தார்.

மேலும் 15 மாத திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்