ஓ.பன்னீர்செல்வம் & ஸ்டாலின் போன்றோருக்கு வழங்கி வந்த என்.எஸ்.ஜி. பாதுகாப்பு வாபஸ்!

ஓ.பன்னீர்செல்வம் & ஸ்டாலின் போன்றோருக்கு வழங்கி வந்த என்.எஸ்.ஜி. பாதுகாப்பு வாபஸ்!

இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு தேசிய பாதுகாப்பு படையில் இருந்த வீரர்கள்,  20 ஆண்டுகளுக்கு மேலாக விஐபிக்களை பாதுகாக்கும் கடைமையை செய்து வந்தனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கான மத்திய பாதுகாப்புப் படையினர் வழங்கும் பாதுகாப்பு நாளை (ஜனவரி 10) முதல் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்தபின் முதல்வராக பொறுப்பேற்றார் ஓ.பன்னீர் செல்வம். அப்போது அவருக்கு மத்திய அரசின் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. பன்னீர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து தர்மயுத்தம் நடத்தியபோதும் அந்த பாதுகாப்பு அவருக்கு தொடர்ந்து வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பன்னீரின் பாதுகாப்புக்கு அச்சுறுத் தல்கள் ஏதும் இல்லை என்றும் அதை சுட்டிக் காட்டி அவருக்கு மத்திய அரசின் பாதுகாப்பு தேவை யில்லை என்று சி.ஆர்.பி.எஃப். தலைமை நிர்வாகம் தமிழக அரசுக்குக் கடிதம் எழுதி இருக்கிறது. இதன் அடிப்படையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இனி சக அமைச்சர் களுக்கான மாநில அரசின் பாதுகாப்பையே பெறுவார் என்று தெரிகிறது. சி.ஆர்.பி.எஃப். தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள பாதுகாப்புக் குறைப்புப் பட்டியலில் திமுக தலை வரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் பெயரும்  இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

 

error: Content is protected !!