April 11, 2021

டோர்னமெண்டால் பரவிய கொரோனா: டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு தொற்று..!

உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான ஜோகோவிச்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செர்பிய வீரரான ஜோகோவிச்சுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக பால்கன் பிராந்தியத்தில் Djokovic’s Adria Tour exhibition tournament- ல் விளையாடிய பிறகு குரோஷியாவின் போர்னா கோரிக், பல்கேரியாவின் கிரிகர் டிமிட்ரோவ் மற்றும் விக்டர் ட்ரொக்கி ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து விளையாட்டு போட்டிகளும் முடங்கியுள்ளது. சில நாடுகளில் விளையாட்டுகள் தொடங்கியுள்ளது. இதனால் பெரும்பாலான டென்னிஸ் வீரர்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர். இந்நிலையில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்ற அட்ரியா டூர் என்ற டென்னிஸ் தொடர் செர்பியா குரோஸியா ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டது.

நேற்று முன்தினம் இந்தத் தொடரில் கலந்து கொண்ட பல்கேரிய வீரர் டிமிட்ரோவ் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் என்னுடன் நெருங்கி பழகியவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் அந்தத் தொடரில் கலந்து கொண்ட ஜோகோவிச்சுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. குரேஷியாவில் இருந்து வருகை தந்த ஜோகோவிச்சுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து ஜோகோவி கூறும்போது, ” இந்த தொடரின் வாயிலாக கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த சூழல் அவர்களின் உடல் நலத்தில் சிக்கலை ஏற்படுத்தாது என்றும் அவர்கள் விரைவில் நலம் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன். எனக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. நான் 14 நாட்கள் என்னை தனிமைப்படுத்திக் கொள்ள இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.