விருப்பபட்டு செக்ஸா- நோ பிராப்ளம் & நோ கேஸ்! = சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

விருப்பபட்டு செக்ஸா- நோ பிராப்ளம் & நோ கேஸ்! = சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

திருமணமான பெண் கணவருடன் மட்டுமல்ல, வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தால் அது குற்றம் இல்லை. மேற்கு ஐரோப்பா மற்றும் சீனாவில் தகாத உறவு குற்றம் இல்லை. எனவே ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் 597-வது பிரிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அது ரத்து செய்யப்படுகிறது என்று முன்னரே சுப்ரீம் கோர்ட்டில் தற்போது தொடரப்பட்ட பாலியல் வழக்கு ஒன்றில் விருப்பப்பட்டு உடலுறவு கொண்டால் அது பாலியல் வன்புணர்வில் வராது என்று கூறியுள்ளது.

விற்பனை வரித்துறையின் உதவி ஆணையராக இருக்கும் பெண் ஒருவர் சி ஆர் பி எஃப் அதிகாரி மீது பாலியல் புகார் ஒன்றை சுமத்தினார். அதில் இருவரும் ஆறு ஆண்டுகள் நெருக்கமாகப் பழகியதாகவும் அதனால் பல முறை உடலுறவுக் கொண்டதாகவும், ஆனால் இப்போது அந்த ஆணுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஏற்பாடாகியிருப்பதாகவும் அதனால் அவருக்குப் பாலியல் வன்புணர்வு பிரிவின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த டி.ஒய். சந்திராசூட், இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு ,’ திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு அதனை மீறுவதை ஏமாற்றியதாக எடுத்துக் கொள்ள முடியாது’ எனக் கூறியுள்ளனர். மேலும் திருமணத்துக்கு முன்னர் விருப்பப்பட்டு பாலியல் உறவுக் கொள்வதை பாலியல் வன்புணர்வாகக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!