புதிய இன்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்க தடை 2024 வரை நீட்டிப்பு!

புதிய இன்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்க தடை 2024 வரை நீட்டிப்பு!

ன்ஜினீயரிங் கல்லூரிகளில் காலி இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. புதிய இன்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் (ஏ.ஐ.சி.டி.இ.) அனுமதி பெறவேண்டும்.

கடந்த 2018ம் ஆண்டு இது குறித்து அமைக்கப்பட்ட குழு, இன்ஜினீயரிங் படிப்புகளில் மாணவர் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பிரச்சினைகளை கருத்தில்கொண்டு 2022ம் ஆண்டு வரை புதிய என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்குவதற்கு தடை விதிக்க பரிந்துரை செய்தது. அந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் 2022ம் ஆண்டு வரை தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் தற்போதும் அதே சூழ்நிலை நீடிப்பதால், மேலும் 2 ஆண்டுகளுக்கு, அதாவது 2024ம் ஆண்டு வரையில் புதிய இன்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடையை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

அதேநேரத்தில், இன்ஜினீயரிங் படிப்புகளில் செயற்கை நுண்ணறிவு, எந்திர கற்றல் போன்ற கணினி அறிவியலின் வளர்ந்துவரும் பாடப்பகுதிகளில் கூடுதல் பிரிவுகள் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது.

error: Content is protected !!