வடகிழக்கு பருவமழை : வானிலை அறிக்கை தகவலும், வாட்ஸ் அப் வதந்தியும்!

வடகிழக்கு பருவமழை : வானிலை அறிக்கை தகவலும், வாட்ஸ் அப் வதந்தியும்!

தமிழகத்தில் கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை சற்று அதிகமாகவே பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுப்பகுதியில் ஒரே நாளில் 50 செ.மீ. மழை பெய்தது. அதன் காரணமாக சென்னையில் வெள்ள சேதம் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்று இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அதன் இணையதளத்தில் அறிவித்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

weather sep 22

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு, கடலோர ஆந்திர பிரதேசம், கேரளா, தெற்கு உள் கர்நாடகா ஆகியவை வருடம் தோறும் பெறக்கூடிய மழையில் 30 சதவீதத்தை பெறுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் வடகிழக்கு பருவமழை காலத்தில் 48 சதவீத மழை கிடைக்கிறது.

கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை காலத்தில் 152 சதவீதம் மழை பெய்தது. அதாவது இயல்பை விட அதிகமாக பெய்தது. ஆனால் இந்த வருடம் (2016) வட கிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் 90 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை பெய்யும். அதாவது இயல்பான மழை பெய்யும்”இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வாட்ச் அப் மூலம் பரவி வரும் வதந்தி நியூஸ் இதோ:

நம்பினால் நம்புங்கள் …!!!! துர்முகி ஆண்டு 2016 (oct 2016 – Jan 2017)

கோவை, ஈரோடு, சேலம் , பொள்ளாச்சி ,உடுமலை , வால்பாறை போன்ற ஊர்களில் மிக அதிகமான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது !!!

சுமார் 400 ஆண்டுகளூக்கு முன்பு பெய்த மழையைவிட அனைத்து ஆறுகளிலும் வற்றாத நீர்பெருக்கு ஏற்படும் !!!

புரட்டாசி மாதம் : தமிழ்நாடு முழவதும் மழை , ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்…கோடி போகும் ..!!!இரவில் அடிக்கடி இடி மின்னல் தோன்றும் !

கார்த்திகை மாதம் அதிக மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி கட்டிடங்கள் சேதம் !!!அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் !!!

7.10.2016-காற்றழத்த தாழ்வு மண்டலம் 1200 கி.மீ இலங்கை , அந்தமான் ,இராமேசுவரம் பாதிப்பு !!

15.10.2016-காற்றழத்த தாழ்வு மண்டலம் 1100 கி.மீ…பூமிஅதிர்ச்சி…!!

15.10.2016-15.10.2016-காற்றழத்த தாழ்வு மண்டலம் 1100 கி.மீ 20. 10.2016-வங்க கடலில் காற்றழத்த தாழ்வு மண்டலம் 1215 கி.மீ..!!

3.11.2016 முதல் மழை சென்னையை உலுக்கும் …!!!

6.11.2016 -காற்றழத்த தாழ்வு மண்டலம் 1400 கி.மீ-புயல் வீசும்..!

13.11.2016 –முக்கிய அணைகள் நிரம்பி வழியும் ..!

17.11.2016 காற்றழத்த தாழ்வு மண்டலம் 1053 கி.மீ இலங்கை , தென்மாவட்டங்கள் பாதிப்பு !!அதிக சேதாரம் !!!
அனைத்து இடங்களிலும் வெள்ளம் !!!

22.11.2016 ஜப்பான்,இந்தோநேசியா பூகம்பம் !!

4.12.2016 முதல் மதுரை பாதிப்பு ..!உலகத்தில் பிரளயம் ..!

10.12.2016 மழை சென்னையை 1 வாரம் உலுக்கும் !!! தாம்பரம் பாதிப்பு  அந்தமான் பூகம்பம் …!!!

11.12.2016 காற்றழத்த தாழ்வு மண்டலம் 1130 கி.மீ ஒரிசா,மகாராஷ்டிரா  பாதிப்பு!!!

11.12.2016 மழை சென்னை பாதிப்பு !!!காசி , நீலகிரி மாவட்டம் மழையால் பாதிப்பு !!!

7.1.2017 காற்றழத்த தாழ்வு மண்டலம் 1800 கி.மீ –லேசான நில நடுக்கம் …!!!

-ஆற்காடு வே.சீதாரம்மய்யர் பஞ்சாங்க கணிப்பு…!!!
————————–***************************************———–
(கணிப்புகள் சரியான தருணங்களில் நம்மை நாமே பாதுக்காக்க உதவும் ..!!!எனவே இயற்கையோடு பாதுகாப்பாக இருப்போம்!!

Related Posts

error: Content is protected !!