December 1, 2021

வேட்புமனுத் தாக்கல் நிறைவு! – முழு விபரம்!

பார்லிமெண்ட்டுக்காக  தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட இன்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில் 39 தொகுதிகளில் மொத்தம் 935வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 820 பேர் ஆண்கள் மற்றும் 113 பேர் பெண்கள் மற்றும் 2 பேர் திருநங்கைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக தென்சென்னையில் 39 ஆண்களும், 8 பெண்களும், ஒரு திருநங்கையும் என மொத்தம் 48 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். தென்சென்னையை அடுத்து திருவண்ணாமலையில் 38 வேட்பாளர்களும், பொள்ளாச்சியில் 37 வேட்பாளர்களும், திருவண்ணாமலையில் 36 வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.,

குறைந்தபட்சமாக நீலகிரி தொகுதியில் 5 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என ஆறு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நீலகிரியை அடுத்து தென்காசியில் 9 வேட்பாளர்களும், பெரம்பலூரில் 13 வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இவர்களில் எத்தனை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கபடும் எத்தனை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது நாளை நடைபெறும் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பின்னரே தெரியவரும்