September 29, 2021

நோபல் பரிசு பெற உள்ளவர்களின் பட்டியல் நாளை முதல் அறிவிக்கப் போறாங்கோ!

இலக்கியம், கலை, அறிவியல், எனப் பல்வேறு துறைகளில் சிறந்த விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படு கிறது. இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிக்கப்பட உள்ளன.

நோபல் பரிசு பெற்றவர்கள், நார்வே நாட்டின் நோபல் கமிட்டியின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், நார்வே நோபல் கமிட்டியின் முன்னாள் ஆலோசகர்கள் போன்றோர் மட்டுமே நோபல் பரிசு பெற தகுதியானவர்களின் பெயரை பரிந்துரைக்கமுடியும்.

இதன் அடிப்படையில் யாருக்கு விருது வழங்குவது என்கிற ஆய்வு எட்டு மாதங்கள் வரை நடக்கும். 5 நபர்களின் தலைமையிலான நார்வே குழு மட்டுமின்றி சர்வதேச ஆலோசகர்களும் இதில் பங்கு கொண்டு ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்து பின்னர் தகுதியான நபர்களுக்கு இப்பரிசை அறிவித்து வழங்குவர்.

இதன்படி நடப்பாண்டுக்கான நோபல் பரிசு நாளை முதல் அறிவிக்கப்படுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்க இந்த பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன. நாளை மருத்துவத்திற்கான நோபல் பரிசும், அக்டோபர் 3ம் தேதி இயற்பியலுக்கும், பரிசுகள் அறிவிக்கப்படுகிறது.

அக்டோபர் 4ம் தேதி வேதியியலுக்கும், அக்டோபர்5ம் தேதி இலக்கியத்துக்கும், நோபல்பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதேபோல் அக்டோர் 6ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், அக்டோபர் 9ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படுகிறது.