February 7, 2023

நோபல் : பொருளாதாரத்துக்கான பரிசு, 3 அமெரிக்கர்களுக்கு பகிர்ந்து அளிப்பு!

லக அளவில் மிகவும் கவுரவமான விருதாக நோபல் பரிசு கருதப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் இந்த பரிசு வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டில் அறிவிக்கப்படுகிறது. மற்ற விருதுகள், சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் அறிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள், கடந்த 3-ந் தேதியில் இருந்து அறிவிக்கப்பட்டு வந்தன. எல்லா நோபல் பரிசுகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு நேற்று இறுதியாக அறிவிக்கப்பட்டது. 3 அமெரிக்கர்களுக்கு இப்பரிசு கூட்டாக பகிர்ந்து அளிக்கப்படுவதாக விருது குழு அறிவித்தது.

அமெரிக்க ரிசர்வ் வங்கி முன்னாள் தலைவர் பென் எஸ்.பெர்னாக், அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் டக்ளஸ் டபிள்யூ.டயமண்ட், பிலிப் எச்.டிவிக் ஆகியோருக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடி குறித்த ஆராய்ச்சிக்காக அவர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வங்கிகள் சீர்குலைவதை தவிர்ப்பது ஏன் முக்கியம்? என்ற ஆராய்ச்சியிலும் ஈடுபட்டனர்.

நோபல் பரிசு, சுமார் 9 லட்சம் டாலர் மதிப்புள்ள ரொக்கப்பரிசு கொண்டது ஆகும். டிசம்பர் 10-ந் தேதி நோபல் பரிசு வழங்கும் விழா நடக்கிறது. அதில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்படும்.