December 2, 2021

2021-ம் ஆண்டு அமைத்திக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

பிலிப்பைன்ஸ் பத்திரிக்கையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷ்ய பத்திரிகையாளர் டிமிட்ரி முரட்டோ ஆகிய இருவருக்கும் 2021- ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்கிற சாதனையாளர்- களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பேச்சுரிமையை பாதுகாப்பதில் வழங்கிய பங்களிப்புக்காக, பத்திரிகை உலகைச் சேர்ந்த டிமிட்ரி அந்த்ரேயவிச் முராட்டோவ் (ரஷ்யா), மரியா ஏஞ்ஜெலிட்டா ரெஸ்ஸா (பிலிப்பைன்ஸ்) ஆகிய இருவருக்கு இவ்வாண்டுக்குரிய அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதாக இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.