Exclusive

அமைதிக்கான நோபல் பரிசு: ஒரு நபர் மற்றும் இரண்டு அமைப்புகளுக்கு அறிவிப்பு!

ர்வதேச அளவில் உயரிய விருதான நோபல் பரிசு ஆண்டிற்கு ஒரு முறை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ்யை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு இரண்டு அமைப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பு நினைவகம் மற்றும் சிவில் உரிமைகளுக்கான உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பு.

மனிதநேய மதிப்புகள் அறிந்து செயல்படுதல், ராணுவ செயல்பாடுகளைத் தடுத்தல், சட்டத்தின் கொள்கைகள் என்ற காரணங்களினால் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பு நினைவகம், ரஷ்யா உக்ரைன் மேல் போர் தொடங்கியதில் இருந்து நடக்கும் போர்க் குற்றங்களைப் பற்றித் தொடர்ந்து உலக அரங்கில் வெளிப்படுத்தி வருகிறது. அதற்காக அந்த அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் உரிமைகளுக்கான உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பு, மனித உரிமைகளைக் காக்கவும், அதனை வலுப்படுத்தவும் தொடங்கப்பட்டது. மேலும் உக்ரைன் ஜனநாயகம் மேம்படுத்தி வலுப்படுத்த பெரும் பங்கு அளித்துள்ளனர். அதற்காக அந்த அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து பெலாரஸ்யை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கி, 1980களில் பெலாரஸ்யில் நடந்த ஜனநாயகம் இயக்கத்தை முன்மொழிந்தவர். அதற்காக இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைதிக்கான நோபல் பரிசின் இறுதி பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த மூவர் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

aanthai

Recent Posts

குரங்கு அம்மைக்கு புதிய பெயர் =எம்.பாக்ஸ் – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

குரங்கு அம்மை, விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவும் ஒரு வகை வைரஸ் தொற்று ஆகும். இது முதன் முதலில் காங்கோ நாட்டில்…

12 hours ago

’பாம்பாட்டம்’ -டிரைலர் வெளியீட்டு விழாத் துளிகள்!

‘ஓரம்போ’, ‘வாத்தியார்’, ‘6.2’ போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, இந்தி…

12 hours ago

ரஜினி நடித்த ’பாபா’ படம் மீண்டும் வெளியாகுங்கோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள *பாபா* படம் மீண்டும் வெளியாகும் என்ற செய்தி இணையத்தில் பரவியதில் இருந்து கடந்த ஒரு…

1 day ago

இறந்தவர்களின் அஸ்தியை தபால் மூலம் புனித கங்கையில் கரைப்பது எப்படி?

உறவினர் ஒருவரின் மறைவிற்கு பின்பு அவரின் அஸ்தியை கங்கையில் கரைக்க எல்லோராலும் நேரில் பொருளாதார, மற்றும் சில காரணங்களால நேரில்…

1 day ago

இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்!

மத்திய புள்ளி விவரங்கள் துறை நடத்திய ஆய்வின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி தொழிற்சாலைகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்…

2 days ago

பவுடர் – விமர்சனம்!

சினிமா ஃபீல்டில் இருந்தே ஒதுங்கிய சாருஹாசன் என்ற நடிகரை மறுபடியும் அழைத்து வந்து தாதா 87 படமெடுத்து அதையும் கம்ர்ஷியல்…

2 days ago

This website uses cookies.