December 5, 2021

குடியுரிமைத் திருத்தச் சட்டம்: இடைக்காலத் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

நாடு முழுக்க பெரும் குழப்பத்தையும், களேபரத்தையும் கிளப்பி உள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அச்சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து திமுக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் 59 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் அனைத்தும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று ஒன்றாக இணைத்து விசாரிக்கப்பட்டன. அப்போது, மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

அதேசமயம், இந்த சட்டம் தொடர்பாக, மத்திய அரசு வரும் 2020 ஜனவரி 22ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

பின்னர், இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.