சாப்ட் சிக்னல் விதிமுறை நீக்கம்! -ஐபிஎல் சீசனில் புதிய விதிகள் அமல்!

சாப்ட் சிக்னல் விதிமுறை நீக்கம்! -ஐபிஎல் சீசனில் புதிய விதிகள் அமல்!

ம் அணிக் கேப்டன் விராட் கோலி சில நாட்களுக்கு முன்பு சர்ச்சைகளை கிளப்பும் சாப்ட் சிக்னல் விதிமுறையை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இது குறித்து ஆலோசனை நடத்திய பிசிசிஐ, ஐபிஎல் 14ஆவது சீசனில் சாப்ட் சிக்னல் விதிமுறை இருக்காது எனத் தெரிவித்துள்ளது. பிசிசிஐ சார்பில் ஐபிஎல் 14ஆவது சீசனுக்காக வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகள் குறிப்பில், “சாப்ட் சிக்னல்: மூன்றாம் நடுவரிடம் முறையிடும்போது களத்தில் இருக்கும் நடுவர் சாப்ட் சிக்னல் வழங்கமாட்டார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆம்.. வர இருக்கும் ஐபிஎல் 2021 சீசனுக்கு புதிய விதிகளை அமல்படுத்தி உள்ளது பிசிசிஐ. அதன்படி சாப்ட் சிக்னலுக்கு தடை போட்டாலும் DRS முறையில் அம்பயர் கால் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு ஷாட் ரன் சர்ச்சை மற்றும் ஆட்ட நேரத்தை குறைக்கவும் விதிகள் திருத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் சாப்ட் சிக்னல் விவகாரங்களில் டிவி அம்பயர் தங்களுக்கு உள்ள அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தி அதன் மூலம் இறுதி முடிவை எட்டலாம் என சொல்லப்பட்டது.

இருந்தாலும் DRS முடிவுகளில் அம்பயர் கால்ஸ் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்மையில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சாப்ட் சிக்னல் தொடர்பான சர்ச்சை எழுந்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் ஷார்ட் ரன் மற்றும் நோ பால் தொடர்பான முடிவுகளிலும் மூன்றாவது அம்பயர்கள் குறுக்கிடலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

error: Content is protected !!