மேற்கு வங்க மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டில் 10,12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. கொரோனா பரவலானது இந்தியா முழுவதும் பரவ தொடங்கிய நிலையில் பல மாநிலங்கள் பொது தேர்வை ரத்து செய்தனர். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமல்லாது அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று பல மாநில அரசானது தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
தற்போது அடுத்த கல்வி ஆண்டு தொடங்கினாலும் தற்போது வரை ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொற்றின் தாக்கம் முழுமையாக குறைய தொடங்கிய நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. நடப்பாண்டு பள்ளிகளே திறக்காத நிலையில் தேர்வுகள் நடைபெறுமா என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நிலவிவந்தது. அதேபோல் எவ்வாறு பள்ளிகளை திறப்பது, பள்ளி, கல்லூரிகளை திறந்தால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுவிடுமோ என அரசும் குழப்பத்தில் உள்ளது.
இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் மேற்கு வங்க மாநிலத்தில் பயிலக்கூடிய 10,12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா பரவல் குறையாத நிலையில் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக நியமிப்பதற்கு 8 பேரின் பெயர் பட்டியலை மத்தியு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.…
நடிகர் சிம்ஹா நடிப்பில் தயாராகி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் 'வசந்த…
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துருக்கியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் துருக்கி- சிரியா…
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (வயது 79) துபாயில் இன்று காலமானார். நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில்…
பிரபல பாடகி வாணி ஜெயராம் இசை உலகில் இதுவரை 19 மொழிகளில் 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்; இந்நிலையில்…
This website uses cookies.