நம்ம இந்தியாவிற்கு நவீன நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) தேவையில்லை. நவீன கிராமங்கள்தான் தேவை!

நம்ம இந்தியாவிற்கு நவீன நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) தேவையில்லை. நவீன கிராமங்கள்தான் தேவை!

நம் இந்தியத் திருநாட்டில் கடந்த நிதியாண்டில், ஆண்களில், 4.3 சதவீதம் பேரும், பெண்களில், 8.7 சதவீதம் பேரும், வேலையில்லாமல் இருந்தனர் நாட்டில், 77 சதவீத குடும்பத் தினருக்கு, நிரந்தர சம்பளம் கிடைப்பதில்லை. வேலை யில்லாதோர் எண்ணிக்கை, கிராமப் பகுதிகளில், 5.1 சதவீதமாகவும்; நகரப் பகுதியில், 4.9 சதவீதமாகவும் உள்ளது. நகரப் பகுதிகளில், 12.1 சதவீத பெண்களும், 3.3 சதவீத ஆண்களும், 10.3 சதவீத திருநங்கையரும், வேலைஇல்லாமல் இருந்தனர் வேலையில்லா திண்டாட்டம் அதிகமுள்ள மாநிலங்களில், 19.7 சதவீதத்துடன், திரிபுரா முதலிடத்தில் உள்ளது. சிக்கிம், 18.1; லட்சத்தீவுகள், 16.1; அந்தமான் – நிகோபர், 12.7; கேரளா, 12.5; ஹிமாச்சலப் பிரதேசம், 10.6 சதவீதமாகவும் உள்ளது.

edit oct 18

இந்நிலையில் இந்தியாவில் கடந்த நான்கு வருடமாக ஒரு நாளைக்கு 550 வேலை இழப்புகள் ஏற்படுவதாக சிவில் சமூக அமைப்பான பிரஹார் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 2050-ம் ஆண்டுக்குள் நாட்டில் 70 லட்சம் வேலை இழப்புகள் ஏற்படும் என தெரிவித்துள்ளது. விவசாயிகள், சிறிய அளவில் உள்ள ரீடெய்ல் விற்பனையாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் ஆகியோர் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது வாழ்வாதார பிரச்சினையைச் சந்தித்து வருவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

இது தொடர்பாக பிரஹார் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “இந்த வருடம் தொடக்கத்தில் தொழிலாளர் ஆணையம் வெளியிட்ட தகவல்படி இந்தியாவில் 2015-ம் ஆண்டு 1.35 லட்சம் வேலைவாய்ப்புகளே உருவாகியுள்ளன. ஆனால் 2013-ம் ஆண்டு 4.19 லட்சம் வேலை வாய்ப்புகளும் 2011-ம் ஆண்டு 9 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாகி இருந்தது. இந்த புள்ளிவிவரங்களை ஆராய்ந்து பார்க்கும் போது கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு நாளைக்கு 550 வேலை இழப்புகள் ஏற்படுகின்றன என்பது தெரிய வ்ருகிறது.. இதே நிலை தொடர்ந்தால் 2050-ம் ஆண்டுக்குள் 70 லட்சம் வேலை இழப்புகள் ஏற்படும். ஆனால் மக்கள் தொகை 2050-ம் ஆண்டு 60 கோடி அதிகரித்திருக்கும்.

வேலை வாய்ப்புகளை அதிகமாக வழங்கக்கூடிய துறைகள் மிகப் பெரிய அளவில் பாதிப்பு அடைந்துள்ளதே வேலைவாய்ப்பின்மைக்கு முக்கிய காரணம். இந்தியாவில் வேளாண்மைத்துறை 50 சதவீத வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. அதைத் தொடர்ந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை 40 சதவீத வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. இந்தியாவில் முறைபடுத்தப்பட்ட துறை 1 சதவீதத்திற்கும் குறை வான வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. இந்தியாவில் முறைபடுத்தப்பட்ட தொழிலாளர்கள் 3 கோடி பேரும் முறைசாரா தொழிலாளர்கள் 44 கோடி பேரும் உள்ளனர்.

உலக வங்கியின் தகவல்படி இந்தியாவில் வேளாண்மைத் துறை 1994-ம் ஆண்டு 60 சதவீத வேலைவாய்ப்புகளை வழங்கி வந்தது. ஆனால் இது 2013-ம் ஆண்டு 50 சதவீதமாக குறைந்துள்ளது.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை விட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 22 கோடி டாலரை இந்தியாவில் முதலீடு செய்யப்போவதாக கடந்த மாதம் பிப்ரவரி மாதம் நடந்த மேக் இன் இந்தியா வாரத்தில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த முதலீடு 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குமா என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

விவசாயம், முறைசாராத ரீடெய்ல், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு உள்ளது. இந்த துறைகளை நம்பித்தான் 99 சதவீத மக்கள் இந்தியாவில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறனர். மத்திய அரசு இந்த துறைகளை ஒழுங்குபடுத்தும் பணியை மட்டும் செய்யாமல் உதவியும் செய்ய வேண்டும். இந்த 21-ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு நவீன நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) தேவையில்லை. நவீன கிராமங்கள்தான் தேவை.

கொசுறு நடப்பு சேதி:

நம்மில் பெரும்பாலானோர் இன்னமும் பாம்பேன்னு சொல்லி வர்ற மும்பை பவாயில் உள்ள சாப்ட்வேர் மேனேஜ்மெண்டில் ஒன்னுலே என்ஜினீயராக ஒர்க் பண்ணி வந்தவரு சஞ்சிவ் ஜெயின். ஜஸ்ட் 27 வயசான ம பி. ஜபல்பூரை சேர்ந்தவ இந்த புள்ளையாண்டான் மூனு மாசத்துக்கு முன்னாடி அந்த மேனேஜ்மெண்டில் வேலைக்கு சேர்ந்தார். இந்த   சஞ்சிவ் ஜெயினுக்கு சரளமா இங்கிலீஷ் பேச தெரியாது. இதனாலே ஆபீசிலே மத்தவங்க பேசுறதை புரிஞ்சிக்க முடியாமலும், அவங்களோட ஆங்கிலத்தில் பேச தெரியாமலும் தவித்து வந்தாராம்

இத்தனிக்கும் என்ஜினீயர் படிச்சு முடிச்சு வந்த தன்னால் ஆங்கிலத்தில் பேச முடியவில்லையே என்று அவருக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டது. இதுபற்றி தனது குடும்பத்தினரிடம் கூட கூறி வேதனைப்பட்டு இருக்கிறார். உடனே அவர்ங்க அட.. அந்த வேலையை விட்டு விட்டு வந்துடுன்னு கூறியுள்ளனர்.

இந்த நிலையில், முந்தா நேத்து தன்னோட சிஸ்டருக்கு போன் செய்த சஞ்சிவ் ஜெயின் இங்கிலிபீசுலே சரளமா பேச முடியாத தன்னோட வாழ்க்கையை முடிச்சு கொள்ள போறதா சொல்லிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதை அறிந்த அந்த பையன் ஃபேமிலி உடனே தானேயில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவங்கபவாய் வந்து சஞ்சய் ஜெயினை தேடினார்கள். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.இதையடுத்து பவாய் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தனர்.

இதுக்கிடையிலே, பவாய் ஏரியில் வாலிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரின் உடலை கைப்பற்றினார்கள். விசாரணையில் அந்த வாலிபர் சஞ்சிவ் ஜெயின் என்பது தெரிய வந்தது. போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வாராங்கோ

Related Posts

error: Content is protected !!