January 29, 2022

மைனர் குற்றவாளிங்களுக்கு நோ ஜெயில் ! – இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க?

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி அண்மையில், “கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் இளம் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2012ம் ஆண்டு 39,822லிருந்து 2014ம் ஆண்டில் இது 48,230 ஆக உயர்ந்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள தகவலின் படி இளம் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. 2012ல் 39 ஆயிரத்து 822 பேரும், 2013ல் இது அதிகரித்து 43 ஆயிரத்து 506 பேரும், 2014ல் 48 ஆயிரத்து 230ஆகவும் இளம் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

edit may 26

ஆனாலும் 16 வயது முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளுக்கு கை விலங்கிடவோ அல்லது அவர்களை சிறைக்கு அனுப்பவோ கூடாது என்று 2015ஆம் ஆண்டு சிறார் குற்றவாளி நீதிச்சட்ட வரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னரும் 2015ஆம் ஆண்டு சிறார் குற்றவாளி நீதிச்சட்ட வரைவு விதிகள், மூத்த நீதிபதி, வழக்குரைஞர்கள், சிறார் குற்றவாளிகள் நீதி வாரியம், குழந்தைகள் நலவாரிய குழு உறுப்பினர்கள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள், மனநல நிபுணர்கள், பொது மக்களின் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட குழுவால் தயாரிக்கப்பட்டது. வரைவு விதிகளை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்திடம் அந்தக் குழு சமர்ப்பித்தது. அதுகுறித்து நாட்டு மக்களின் கருத்துகளை அறிவதற்கு மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் விரும்புகிறது.

இதையடுத்து, தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி கலந்து கொண்டு, 2015ஆம் ஆண்டு சிறார் குற்றவாளி நீதிச்சட்ட வரைவு விதிகளை வெளியிட்டார்.

இந்த சட்ட வரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

16 முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளுக்கு கை விலங்கிடக் கூடாது. அத்தகைய நபர்களை சிறைக்கு அனுப்பவோ அல்லது காவலில் வைக்கவோ கூடாது. ஒவ்வொரு மாநில அரசும், அத்தகைய சிறார்களின் மறுவாழ்வுக்காக குறைந்தபட்சம் ஒரு பாதுகாப்பு மையத்தையாவது ஏற்படுத்த வேண்டும். அங்கு அந்த சிறார்களை தீவிரமாக கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். சிறார் குற்றவாளிகள் வழக்கு விசாரணையின்போது நீதி வாரியத்தின் உத்தரவால் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கருதும்பட்சத்தில் சிறார்கள் நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம்.

இதையடுத்து, சிறார் குற்றவாளிகளுடன் சிறார்கள் நீதிமன்றம் நேரிடையாக கலந்தாலோசித்து, அவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? சமூகத்துக்கு அவர்களால் பங்களிப்பு அளிக்க முடியுமா? என்பதை ஆய்வு செய்யும். அதன்பிறகு அவர்களின் எதிர்காலம் குறித்து சிறார்கள் நீதிமன்றம் முடிவெடுக்கும் என்று அந்த சட்டவரைவு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

http://wcd.nic.in/acts/draft-model-rules-2016-under-juvenile-justice-care-and-protection-children-act-2015