March 26, 2023

ஐ.பி. எல் 2019 : ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் தொடங்காது!

ஐ.பி.எல் போட்டி:  ஆண்டு தோறும் இதன் துவக்க விழா போட்டி துவங்கும் ஒருநாளைக்கு முன் ஆட்டம், பாட்டம் என கோலாகலமாக துவங்கும். ஆனால், இந்த வருடம் ஐ.பி.எல் போட்டிகளில் எந்த  விழாவும் நடக்காது என்று பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

உலக அளவில் பிரபளாஆஆணா ஐ.பி.எல் போட்டியின் 12-வது சீசன் இந்தியாவில் வரும் மார்ச் மாதம் 23-ம் தேதி தொடங்கும் என அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐ.பி.எல் தொடருக்கான அட்டவணையை இந்தியன் ப்ரீமியர் லீக் நிர்வாகம் கடந்த 19-ம் தேதி (பிப்.19) வெளியிட்டது.

அதன்படி, மார்ச் 23-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் முதலிரண்டு வாரங்க ளுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

அதே சமயம் இந்த ஐபிஎல் போட்டியின் துவக்கவிழா பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்திய முழுவதிலும் இருந்து திரைப்பிரலங்கள், பின்னணி பாடகர்கள் கலந்து கொண்டு துவக்க விழா வண்ண மையமாக நடைபெறும். இந்த வருடமும் அதைபோல் பிரம்மாண்டமாக நடைபெறும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில், பிசிசிஐயின் ஆலோசனைக் கூட்டம் இன்று (பிப்.222) டெல்லியில் நடைபெற்றது. இதில், பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 3 பேர் நேரடியாகவும், மற்ற உறுப்பினர்கள் தொலைபேசி வாயிலாகவும் பங்கேற்றனர். இந்த ஆலோசனை முடிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்வாகக்குழுத் தலைவர் வினோத் ராய்,

அடுத்த மாதம் (மார்ச் 23) தொடங்க உள்ள ஐ.பி.எல் டி-20 லீக் கிரிகெட் தொடருக்கான தொடக்க விழா ரத்து செய்யப்படுகிறது. அதற்காக செலவு செய்யப்படும் பணம், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்காக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.