ட்ராவல் அலவன்ஸ் கட்!- மத்திய அரசு தகவல்!

ட்ராவல் அலவன்ஸ் கட்!- மத்திய அரசு தகவல்!

மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட அறிவிப்பில், விடுமுறை காலப் பயண சலுகையின்கீழ் எதிர்பாராத செலவு, உள்ளூர் பயணங்களுக்குக் கட்டணத்தைப் பெற முடியாது. மேலும், பிரிமியம், சுவிதா ரயில்களில் பயணிப்பது, தட்கல் முறையில் பயணிப்பது போன்றவற்றுக்கு அரசு ஊழியர்களுக்குப் பயணக் கட்டணம் திருப்பி தரப்படும். ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில்களில் பிளக்சி பேர் பயணத்துக்கு கட்டணம் திரும்பி அளிக்கப்படும். அரசுக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்கள், மாநில அரசுகளின் வாகனங்கள், உள்ளாட்சி நிர்வாகங்களின் வாகனங்களில் பயணிக்கும்போது, அதற்கான செலவுத் தொகையைப் பெற முடியும்.

அதுபோன்று, அரசு வாகனங்கள் செல்ல முடியாத இடத்துக்குச் செல்லும்போது, அரசு ஊழியர் தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். அதற்குரிய கட்டணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். அதுவும், 100 கி.மீட்டருக்குள் இருந்தால் மட்டுமே. தற்போது, இந்த விடுமுறை காலப் பயண சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு 2017 ஜூலை 1ஆம் தேதி முன் தேதியிடப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

முன்னதாக மத்திய அரசு ஊழியர்கள், குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதற்கு, எல்.டி.சி., எனப்படும், விடுமுறை பயணச் சலுகை அளிக்கப்பட்டு வந்ததும் .இதன்படி, ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு தரப்பட்டு. ரயில் டிக்கெட் செலவுத் தொகை, திரும்ப வழங்கப்பட்டும் வந்தது. இந்நிலையில், விடுமுறை பயண திட்டம் தொடர்பாக, ஏழாவது ஊதிய கமிஷன் சில பரிந்துரைகளை செய்தது. அதை ஏற்று, மத்திய அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை, புதிய உத்தரவை பிறப்பித்துஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

error: Content is protected !!