ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்!!

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது : மத்திய அரசு திட்டவட்டம்!!

டந்த 1951ல் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து ஜாதி ரீதியிலான தகவல்களை சேகரிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதுவே தற்போதும் தொடர்கிறது. ஓ.பி.சி., பிரிவினர் குறித்த தகவல்கள் சேகரிப்பது என்பது நிர்வாக ரீதியில் மிகவும் கடினமானது, சிக்கலானது. அதனால் தான் இந்தத் தகவல்களை சேகரிப்பதில்லை என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

நாடு முழுதும் 2011ல் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பொருளாதார ரீதியிலான தகவல்கள் மட்டும் வெளியிடப்பட்டன. ஆனால் ஜாதி வாரி கணக்கெடுப்பு விபரங்கள் வெளியிடப்படவில்லை.மாநிலத்தில் உள்ள ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் குறித்த விபரங்களை தரும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, மஹாராஷ்டிரா அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஒன்றிய அரசு பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் கொரோனா பேரிடரில் 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிப்போனதாலும் கணக்கெடுப்பை எந்த அடிப்படையில் நடத்துவது என்பதற்கான பட்டியல் உட்பட அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 2011ல் எடுக்கப்பட்ட சமூக, பொருளாதார கணக்கெடுப்பு புள்ளி விபரங்களில் பல தவறுகள், குழப்பங்கள் உள்ளன. அது முழுமையானதாகவும் இல்லை. அதனால் அந்த தகவல்களை எதற்காகவும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021ல் நடத்தப்பட வேண்டும். அதற்காக கடந்தாண்டே உரிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டு விட்டன.எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் குறித்த தகவல்கள் மட்டுமே மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும்.இச்சூழலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு சுப்ரீம் கோர்ட் இனி உத்தரவிட்டால் அது தேவையற்ற குழப்பங்களுக்கு வழிவகுப்பது மட்டுமின்றி நிர்வாக ரீதியாகவும் சிக்கலை உருவாக்கும் என்று மத்திறிய அரசு குறிப்பிட்டுள்ளது.

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது நிர்வாக ரீதியில் மிகவும் கடினமானது, குழப்பானது, சிக்கலானது என்பதால் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் தொடர்பான தகவல்களை சேகரிப்பதில்லை என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ அரசின் கொள்கை முடிவிற்கு மாறாக ஓபிசியை உள்ளடக்கிய சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் மோடி அரசு தமது பிரமாண பத்திரத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

error: Content is protected !!