March 31, 2023

நிசான் கார் கம்பெனி தலைவர் பண மோசடி வழக்கில் கைது!

ஜப்பானின் நிசான் கார் கம்பெனி தலைவரான கார்லோஸ் கோஸன் தலைநகர் டோக்கியோவில் இன்று கைது செய்யப்பட்டார்.

நிசான் பிரெஞ்சு நாட்டுக் குடிமகன். பிரான்ஸ் நட்டில் உள்ள ரீனால்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகியாக இருக்கிறார். நிசான் நிறுவனப் பணத்தை தனது சொந்த தேவை களுக்குப் பயன்படுத்தியதாக கோஸன் மீதும் மற்றொரு நிசான் இயக்குநர் கிரெக் கெல்லி மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் நிசான் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் ரகசியமாக தெரிவித்த புகார்மீது ஆய்வுநடத்திய போலீஸார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

நிசான் நிறுவனப் பதவிகளில் இருந்து கோஸன் நீக்கப்படுவார். அதற்கான தீர்மானத்தை நிசான் நிறுவன தலைமை ஹீரோட்டா சாய்கவா நிசான் இயக்குநர் கூட்டத்தில் வெளியிடுவார் என்று தெரிகிறது.

கோஸன் 2001இல் நிசான் தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றார். அதன் நஷ்டத்திலிருந்து மீட்டார். நிசான், மிட்சுபிஷி, ரீனால்ட் கொண்ட கூட்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். இந்த வர்த்தகக் கூட்டுகள் நிலைக்குமா எனத் தெரியவில்லை என்பது எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்.