சென்னை ஐஐடி முதலிடம் ; மத்திய அரசின் பட்டியல் தகவல்!

சென்னை ஐஐடி முதலிடம் ; மத்திய அரசின் பட்டியல் தகவல்!

1956 ஆம் ஆண்டு ஜெர்மன் அரசு இந்தியாவிற்குப் பொறியியலில் உயர்கல்வி வழங்கக் கல்விக் கூடம் ஒன்றை நிறுவத் தொழில்நுட்ப உதவி வழங்கியது. இதற்கான முதல் இந்திய-ஜெர்மன் உடன்பாடு 1959 ஆம் ஆண்டு அப்போதைய மேற்கு ஜெர்மனியின் பான் நகரில் ஒப்பந்தம் செய்யப் பட்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த பெருமைமிகு சென்னை ஐ ஐடி தற்போது  இந்தியா வில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான மத்திய அரசின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

நாடு முழுவதிலும் இயங்கிவரும் கல்வி நிலையங்களுக்கான தரவரிசை வெளியிடும் நிகழ்வு கடந்த 2015 ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. இதன்படி, பொறியியல் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிடுகிறது.

இந்நிலையில், இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலை மத்திய அரசின் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல்:

* அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 7-வது இடம்.
* பாரதியார் பல்கலைக்கழகம் (கோவை) 14-வது இடம்.
* சென்னைப் பல்கலைக்கழகம் (சென்னை ) 20-வது இடம்.
* காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் (காரைக்குடி) 28-வது இடம்.
* சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் (சென்னை ) 32வது இடம்.

Related Posts

error: Content is protected !!