Exclusive

கட்டிங் கண்ணையா ஆகிய நான் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரன் இல்லை!

ன்னிக்கு ஈவ்னிங் யாரோ ஒரு தம்பி அப்பப்போ ட்ரெண்டிங்-க்குகாக எழுதும் வழக்கமுடைய வரின் சில வரிகளை நம் கட்டிங் கண்ணையாவுக்கு அனுப்பி இது நெசமா?-ன்னு கேட்டிருந்தார்..

அதுக்கு கட்டிங் கண்ணையா அனுப்பிய விளக்கம் இதோ:

பணிவின் சிகரமாக வெளிப்படுவார்

பசுவைப் போல சாந்த சொரூபியாக காட்சி தருவார்!

ஆனால், படு காரியவாதி! அவர் தான் ஒபிஎஸ்!

பதவி ஒன்றே அவரது இலக்கு! பாஜக விசுவாசம் மட்டுமே அவரது குறிக்கோள்! இருபதாண்டுகளாக அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் மிகப் பெரிய பதவிகளை அனுபவித்த ஒபிஎஸ், இன்று சொந்த கட்சியிலும்,தொகுதியிலும் அந்நியப்பட்டு நிற்கிறார்.

இன்றைக்கு தமிழகம் சந்திக்கும் இழிவுகளுக்கும், ஆபத்துகளுக்கும் பிள்ளையார் சுழி போட்ட பெருமகனும் இவர் தான்!

தேனீர் கடையோடு, பைனான்ஸ் பிசினஸையும் பார்த்துக் கொண்டு, எம்ஜிஆர் இளைஞர் அணியில் செயல்பட்டு வந்த பேச்சிமுத்துவுக்கு பெயர்மாற்றம் செய்து கொண்டால், பெரிய வளர்ச்சி இருக்கும் என ஒரு ஜோசியர் சொல்ல பன்னீர்செல்வமாக பெயர்மாற்றம் கண்டார்.

பன்னீர் செல்வத்தை நான் முதன் முதலில் பார்த்தது போடித் தொகுதியில் ஜெயலலிதா 1989 தேர்தலில் போட்டியிட்ட போது அதை கவரேஜ் செய்ய போயிருந்த சமயத்தில் தான்! ஜெயலலிதாவிற்கு எதிராக ஜானகி அணி சார்பில் வெண்ணிற ஆடை நிர்மலா நின்றார். அவரது தேர்தல் பணிகளை முன்னின்று செய்த சுலோச்சனா சம்பத் மற்றும் வளர்மதி ஆகியோருக்கு மிகவும் உதவிகரமாக இருந்தார்.

அதன் பிறகு 1991 ல் ஜெயலலிதாவின் பொதுக் கூட்டம் பெரியகுளத்தில் நடந்த போது, அந்த மேடையில் சாஸ்டாங்மாக விழுந்து எழுந்து, மற்றவர்களையும் விழத் தூண்டினார். ஒரு வகையில் அதிமுகவில் காலில் விழும் கலாச்சாரத்தை வலுப்படுத்தியவரே ஒபிஎஸ் தான்!

என்று குறிப்பிட்டு இது நெசமா? என்று கேட்டதற்கு பதில்..

ஐயா இதுக்கு பதில் சொல்ல கொஞ்சம் கால அவகாசம் வேணும்.. இப்படி காலில் விழும் போக்கு காந்தி காலத்தில் கூட நிறைய நடந்துளது.. நேரு இது குறித்து பல முறை குறிப்பிட்டுள்ளாராம்.. இப்படி ஜெ.காலில் விழுவது மாதிர் போட்டோக்கள் பரவலாகுது குறித்து இதே ஓ பன்னீரிடம் நேரில் கேட்ட போது, ‘நான் ஒருவர் காலில் விழும் போட்டோவைப் பார்க்கும் எத்தனை பேர்கள் என் காலில் விழுகிறார்கள்’ என்பதை எண்ணினால் பொழுது காணாது’ என்றார்.

ஆனாலும் ..இந்த காலில் விழுதல் குறித்த விளக்கத்தால்தான் ஒரு கார்ட்டூனிஸ்ட் எடிட்டராக இருந்த தகுதியை இழந்தார்.. அப்படி இழந்தவர் போல் கட்டிங் கண்ணையா ஆகிய நான் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரன் இல்லை என்பதால் இந்த ஆந்தை ரிப்போர்ட்டர் டெஸ்க்மேன் ஜாப்பை இழக்க தயாரில்லை..

இந்நிலையில் இந்த காலில் விழும் போக்கு குறித்து நான் அறிந்த சில சமாச்சாரங்களை இப்போதைக்கு பகிர்கிறேன்..

இந்த பிரபஞ்சத்தில் எந்த விலங்கும் மற்றொரு விலங்கின் காலில் விழுவதில்லை. பூச்சிகள் கூட மற்றொரு பூச்சியின் காலில் விழுவதில்லை. சிலந்திக்கு எட்டு கால்கள் இருந்தும் அதன் காலில் எந்த ஒரு பூச்சியும் விழுவதில்லை என்பதன் மூலம் பூச்சிகள் எப்படிபட்ட விழிப்புணர்வு நிலையில் இருக்கிறது என்பது உணர முடியும். சரி சரி… நீங்கள் பொறுமை இழக்கும் முன் விஷயத்திற்கு வருகிறேன் 🙂

அனைத்து மனிதர்களும் சமமாக பாவிக்க வேண்டும் எனும் பொழுது எதற்கு மற்றொருவன் காலில் விழ வேண்டும்? விலங்குகளும் பிற உயிரினமும் ஆணவம் மிகுந்து திரிவதில்லை. நானே உலகை காக்கிறேன் என சொல்லி இயற்கை வளங்களை அழிப்பதில்லை. அதனால் விலங்குகளுக்கு காலில் விழும் அவசியம் இல்லை..!

வணங்குதல் என்ற செயல் ஒரு மனிதனை இறைவனாக்குகிறது. நன்றாக புரிந்து கொள்ளுதல் அவ்வளவு எளிதல்ல.. அதே சமயம் வணங்கப்படுபவன் இறைவனாவதில்லை. வணங்குபவனே இறைவனாகிறான்..! எப்பொழுது நாம் பிற விஷயத்தை வணங்குகிறோமோ அப்பொழுது நாம் நம் அகந்தை நீங்கி நான் வணங்கப்படும் பொருளை விட எளியவன் என்ற எண்ணம் வருகிறது. நான் முற்றிலும் சரணாகதி அடைகிறேன் என்பதே வணங்குதலின் அடிப்படை செயல்.

மஹாபாரதத்தில் ஒரு காட்சி. மிகவும் சோகமான தருணம் அது. திரெளபதியை மானபங்கம் செய்ய துச்சாதனன் தூக்கிவந்து அவளின் துகிலை உரிக்க துவங்குகிறான். பலர் முன் அவமானப்படாமல் இருக்க தன் கையை உடல் மேல் வைத்து தன் மானத்தை காக்கிறாள் திரெளபதி. கணவர்கள் கூடி இருக்க, பெரியோர்கள் முன்னிலையில் இந்த அவச்செயல் நடைபெறுகிறது, தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து முடியாத நிலையில் திரெளபதி பரமாத்மாவை அழைக்கிறாள். இருகைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி ‘க்ருஷ்ணா…!” என்ற ஒரு குரல் எழுப்புகிறாள். நடந்த மற்றவை உங்களுக்கே தெரியுமே?

தான் என்ற அகந்தை இருக்கும் வரை அவளை யாரும் காக்க முடியவில்லை. தன் கையை உயர்த்தி சரணடைந்ததும் அவள் காக்கப்பட்டாள். அதுபோல உங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுகிறேன் என நீங்கள் நினைக்கும் வரை உங்களை நீங்கள் தான் காத்துக்கொள்ள வேண்டும். இறைவனிடம் சரணாகதி அடைந்தால் அனைத்தையும் இறைநிலை பார்த்துக்கொள்ளும்.

ஆனால் சரணாகதி அடைதல் என்பது அவ்வளவு எளிதான காரியம் என நினைத்துவிடாதீர்கள். உலகில் மிகக்கடினமான காரியம் சரணாகதி அடைதல்.இது குறித்து விரைவில் நீங்களெல்லாம் நம் ஆந்தை ரிப்போர்ட்டர் குழுவிடம் சரணாகதி அடைந்தால் சகல உலக சேதிகளும் நம் விழிகளுக்குள் வரும் என்று நம்பி இருப்பது குறித்து மிக விரைவில் விவரிக்கிறேன் – அன்புடன் கட்டிங் கண்ணையா

பி. கு: இந்த காலில் விழுவதையும் தாண்டி 15 ஆண்டுகாலத்திற்கும் மேலாக அதிமுகவின் பொருளாளர் பொறுப்பு வகித்த பன்னீர், தான் சார்ந்த தென் மாவட்டங்களிலாவது கட்சியை வளர்த்திருப்பாரா? நம்பிக்கையான தளபதிகளை கண்டெடுத்திருப்பாரா? பலருடைய வளர்ச்சிக்கு பங்களித்திருப்பாரா…? அரசு வேலை வாய்ப்பு சார்ந்தவற்றில் எளிய தொண்டர்களுக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் வாய்ப்பு பெற கைகொடுத்திருப்பாரா..? எதுவுமே இல்லை! தனக்கு கிடைத்த முக்கியத்துவம் எல்லாவற்றையுமே காசு பார்க்க மட்டுமே வாய்ப்பாக்கிக் கொண்டார் பன்னீர். அதனால் தான் அவர் என்றென்றுமே ஒரு தனி மனிதராக குடும்ப வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவராக காட்சியளிக்கிறாராமே என்பது போன்ற விவகாரங்களை அலச நேரமில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

நிலவளம் ரங்கராஜன் – பொறுப்பாசிரியர்

aanthai

Recent Posts

தூதரகங்களுக்கு வந்த விலங்குகளின் கண்கள் பார்சல் – உக்ரைன் அதிர்ச்சி!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 10 மாதங்களை கடந்தும் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இந்த போரில் உக்ரைன் மற்றும் ரஷ்யா…

1 hour ago

டிஎஸ்பி.- விமர்சனம்

ஐந்து வருடங்களுக்கு முன்னால் -அதாவது 2017இல் நல்ல ஸ்கிரிப்டுடன் வந்த விக்ரம் வேதாவுக்கு பிறகு ஏனோதானொவென்று திரையில் தோன்றும் போக்கு…

4 hours ago

“வரலாறு முக்கியம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்புத் துளிகள்!

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “வரலாறு…

7 hours ago

பிராமண உயிர் அற்பமானதா என்ன ?!

முந்தாநாள் தில்லியின் ஜேஎன்யூ பல்கலைக் கழக வளாகத்தில் சில சுவர்களில் பிராமணர்களுக்கு எதிரான வாசகங்கள் காணப்பட்டன. 'பிராமணர்களே இந்தியாவை விட்டு…

8 hours ago

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையைச் சொல்லும் “விட்னஸ்”!

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் “விட்னஸ்” திரைப்படம், வருகிற டிசம்பர் 9-ம் தேதி சோனி ஓடிடி…

12 hours ago

10 மாதங்களாக தொடரும் எரி பொருள் கொள்ளை – கார்கே குற்றச்சாட்டு!

நம் நாட்டில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அமைந்ததில் இருந்தே அன்றாடம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.…

1 day ago

This website uses cookies.