October 16, 2021

நியூஸ் 18 சேனலில் “அறிவை விரிவு செய்”

கல்விக்கு முன்னுரிமை தரும் பட்டியலில் தமிழகப் பெற்றோர் எப்போதும் முன்வரிசையில்இருக்கின்றனர். தங்களுக்கு கிடைக்காத/ தங்களுக்கு திறக்காத அறிவின் வாசல் தன் அடுத்தத்தலைமுறைக்கு அகலத் திறக்க வேண்டும் என்பதில் அவர்கள் பேரார்வம் கொண்டுள்ளனர். அதனால்தான் சிவில் சர்வீஸ் தேர்வுகள், நீட் நுழைவுத் தேர்வு, பொறியியல் நுழைவுத் தேர்வுமற்றும் பல்வேறு வகையான உயர்கல்விக்கான தேர்வுகளில் தமிழக மாணவர்கள் மிகுந்தஆர்வத்துடன் பங்கெடுத்து வருகின்றனர்.

tv oct 23

அவர்கள் எங்கு, எதைப் படிக்க வேண்டும், அதிகம் அறியப்படாத படிப்புகள் எவை, வெளிநாட்டுக்கல்வியில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள், கல்வி உதவித்தொகை குறித்த உடனடித் தகவல்கள்…என அனைத்தையும் அள்ளித் தரும் நிகழ்ச்சிதான் அறிவை விரிவு செய்.

’நியூஸ் 18 தமிழ்நாடு’ தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, கல்வி வேலைவாய்ப்பு குறித்த ஒரு மாறுபட்ட வழிகாட்டி நிகழ்ச்சியாக இருக்கும்.

கல்வி சார்ந்த நிபுணர்களின் அக்கறையான வழிகாட்டுதல், சந்தேகங்களுக்கான ஆலோசனைகள் என கல்வியின் அனைத்து அம்சங்களையும் சுவாரஸ்யமாகவும், பயனுள்ளதாகவும் வழங்குகிறது அறிவை விரிவு செய் நிகழ்ச்சி. சனிக்கிழமை தோறும் காலை 11.00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி அன்று இரவு 9.00 மணிக்கு மறுஒளிபரப்பாகிறது.