February 7, 2023

சிகரெட் தடை சட்டத்தை சீரியஸாக அமலாக்கும் நியூசிலாந்து!

நியூசிலாந்தை சிகரெட் புகை இல்லாத நாடாக மாற்ற அந்நாட்டு அரசு புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. அந்நாட்டில் பிரதமர் ஜெசிக்கா ஆர்டென் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்கவும், சிகரெட் புகையில்லா தலைமுறையை உருவாக்கவும் அரசு விரிவான திட்டத்தை உருவாக்க சிக்ரெட் தடை சட்டம் என்ற ஒன்றை அமல்படுத்தியுள்ளது.

அதன்படி, அந்நாட்டில் 2009ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள் எவருக்கும் சிகரெட், புகையிலை விற்கக் கூடாது. அதாவது 2008க்கும் பின் பிறந்தவர்கள் புகையிலை, சிகரெட் வாங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்தபட்ச வயது சட்டம் ஆண்டுகள் கடந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும். எனவே, 50 ஆண்டுகள் கழிந்த பின்னர், சிகரெட் வாங்குவதற்கு குறைந்தபட்ச வயது 63 வயதாக இருக்கும்.

அதற்குள் ஒரு தலைமுறையினர் மத்தியில் புகைபிடிக்கும் பழக்கம் மறைந்தே போய்விடும் என்ற நம்பிக்கையில் அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளனர். இந்த புதிய சட்டத்தின் படி, அந்நாட்டில் சிகரெட், புகையிலை விற்கும் கடைகளின் எண்ணிக்கை 6000இல் இருந்து 600ஆக குறைக்கப்படும். மேலும், புகையிலையில் நிக்கோடின் அளவையும் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.