புத்தாண்டு பிறந்தது: நியூசிலாந்தில் மக்கள் உற்சாக வரவேற்பு!

புத்தாண்டு பிறந்தது: நியூசிலாந்தில் மக்கள் உற்சாக வரவேற்பு!

உலகளவில் புத்தாண்டு நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில்தான் ஆண்டுதோறும் முதல் கட்டமாக பிறக்கும் அதன்படி இந்திய நேரத்தின்படி 4- 30மணிஅளவில் அங்கு நள்ளிரவு 12 மணி ஆனதும் புத்தாண்டு பிறந்தது .இதையொட்டி அங்கு நிகழ்ச்சிகள் கோலாகலமாக அரங்கேறின.. ஆக்லாந்து நகரில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு வரவேற்கப்பட்டது.

இப்பூவுலகின்2019ம் ஆண்டு முடிந்து, 2020 புத்தாண்டில் உலக நாடுகள் அடியெடுத்து வைக்கின்றன. இதில் முதல் நாடாக தென்கிழக்கே இருக்கும் நியூசிலாந்து நாட்டில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு 2020 புத்தாண்டு பிறந்தது. இதையொட்டி நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நள்ளிரவு முடிந்து புத்தாண்டு தொடங்கு வதை குறிக்கும் வகையிலான கவுன்டவுன் முடிந்ததும், அங்கு பிரமாண்ட வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

வாண வேடிக்கையின்போது வானுயர கோபுரங்களில் இருந்து பல்வேறு நிறங்களை கொண்ட பட்டாசுகளை வானத்தை நோக்கி சென்று வெடித்து சிதறின. வானில் இருந்து பூ ஜூவாலை பொலிவது போன்ற காட்சியை காண்போருக்கு ஏற்படுத்தின. வாண வேடிக்கையை அப்பகுதியில் திரண்ட சுற்றுலா பயணிகளும், தொலைக்காட்சிகள் மூலமும் ஏராளமானோர் கண்டுரசித்தனர். வாணவேடிக்கையை தொடர்ந்து, ஆக்லாந்தில் சிறப்பு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

Related Posts

error: Content is protected !!