கண் பார்வையற்றோர் & காது கேளாதோருக்கான நவீன டி.வி!

கண் பார்வையற்றோர் & காது கேளாதோருக்கான நவீன  டி.வி!

உலகில் கண் பார்வை அற்றோரை அதிகம் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது; உலக அளவில் பார்வையற்றோரின் எண்ணிக்கை 3கோடியே 70 இலட்சம் என்றிருக்க இதில் 1 கோடியே 20 லட்சம் பேர் இந்தியாவிலேயே இருக்கிறார்கள் என்று மத்திய அரசின் ஒரு புள்ளி விபரம் தெரிவித்திருந்த நிலையில் கண் பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கான அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய புதிய டி.வி. உருவாக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் துறையில் அதிநவீன தொழில் நுட்பங்கள் உருவாகி வருகின்றன. தற்போது கண் பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கு டி.வி. நிகழ்ச்சிகள் வேறு ஒருவரின் சைகை மூலம் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அவர்களும் டி.வி. நிகழ்ச்சிகளை வேறு ஒருவரின் துணையின்றி தாங்களாகவே உணர்ந்து ரசிக்கும் வகையில் புதிய டி.வி. தயாரிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் உள்ள யுனிவர்சிடட் கரோல்ஸ் 3டி மாட்ரிட் என்ற நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் புதிய ஆய்வு மூலம் டி.வி.யில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர்.

அதாவது ண் பார்வை இல்லாதவர்கள் எழுத்துக்களைப் படிக்க, விரல்களால் தொட்டு உணரும் பிரெய்லி முறை உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. இதன் அடுத்தகட்டமாக, பார்வையற்றவர்களும், காதுகேளாதவர்களும் தொலைக்காட்சி பார்க்க வசதியாக புதிய தொழில்நுட்பத்தை ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.இதன்படி, டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் வரிவடிவங்கள், பிரெய்லி முறைக்கு மாற்றப்பட்டு, ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப்புக்கு அனுப்பப்படும். இந்த தொகுப்பு பிரத்யேக செயலியின் மூலம் விரல்களால் தொட்டு படித்துக் கொண்டே, கண்பார்யைற்றவர்களும், காதுகேளாதவர்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசிக்க முடியும்.

சிம்பிளாக சொல்வதானால் பிரைலி மூலம் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆப் உருவாக்கி அதன் மூலம் பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் டி.வி. நிகழ்ச்சிகளை ரசிக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர். இதன் சோதனை ஓட்டம் மாட்ரிட் நகரில் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து ஸ்பெயினில் மேட்ரிட் ((Madrid)) நகரில் உள்ள சேனல்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இந்த தொழில்நுட்பம், பிற சேனல்களுக்கும் நடைமுறைக்கு வர உள்ளது.

Related Posts

error: Content is protected !!